சுசீந்திரம், செப். 2 –
சுசீந்திரம் தாணுமாலய சுவாமி கோவில் வடக்கு பாகத்தில் ஒரே கல்லில் செதுக்கப்பட்ட 18 அடி உயரம் உடைய ஆஞ்சநேயர் முழு உருவ சிலை உள்ளது. இந்த ஆஞ்சநேயருக்கு மாதம் தோறும் மூல நட்சத்திரத்தில் சிறப்பு அபிஷேக அலங்கார தீவாரணையும் 18 அடி உயரம் உடைய வெள்ளியால் செய்யப்பட்ட முழு உருவ அங்கி சாத்தப்பட்டு சிறப்பு தீபாரதனை நடைபெறுவது வழக்கம். அதுபோல இன்று மூல நட்சத்திரம் என்பதால் ஆஞ்சநேயருக்கு சிறப்பு அபிஷேக அலங்கார தீபாரதனையும் முழு வெள்ளி அங்கியும் சாத்தப்பட்டு பூஜைகள் நடைபெற்றது. இதில் உள்ளூர் மட்டுமின்றி வெளியூர் பக்தர்களும் பெரும் அளவு கலந்து கொண்டனர்.



