முன்னாள் படைவீரர்களின் பிள்ளைகள் கல்வி உதவித்தொகைக்கு விண்ணப்பிக்கலாம்.
ஜூன் 1 முதல் நவம்பர் 15 வரை விண்ணப்பிக்க முடியும.
23 May 2025, தேனி
2025-2026 ஆம் கல்வி ஆண்டு முதல் 12-ஆம் வகுப்பில் தேர்ச்சி பெற்ற அவில்தார் தகுதி வரையுள்ள முன்னாள் படைவீரர்கள் சார்ந்தோர்களின் சிறார்கள் தொழிற்கல்வி படிப்புக்கு பாரத பிரதமரின் கல்வி உதவித்தொகை திட்டத்தின் கீழ் (Prime Minister Scholarship) கல்வி உதவித்தொகை பெறுவதற்கு www.ksb.gov.in என்ற இணையதளம் வாயிலாக ஜூன் 1 முதல் நவம்பர் 15 வரை விண்ணப்பிக்கலாம்.
மேலும், முன்னாள் படைவீரர்கள் / சார்ந்தோர்கள் தொகுப்பு நிதியிலிருந்து கல்வி உதவித்தொகை பெறுவதற்கு JCO மற்றும் அதற்கு மேல் தகுதியுள்ள முன்னாள் படைவீரர்கள் /சார்ந்தோர்களின் சிறார்கள் www.exwelthn.tn.gov.in என்ற இணையதளம் வாயிலாக விண்ணப்பித்து, ஆவணங்களை தேனி மாவட்ட முன்னாள் படைவீரர் நல அலுவலகத்தில் சமர்ப்பிக்க வேண்டும்.
இதுதொடர்பான கூடுதல் விவரங்களுக்கு உதவி இயக்குநர், முன்னாள் படைவீரர் நல அலுவலகம், மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகம், தேனி அவர்களை நேரில் தொடர்பு கொண்டு தெரிந்து கொள்ளலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் .ரஞ்ஜீத் சிங், தெரிவித்துள்ளார்கள்.