நாகர்கோவில், ஜூலை 19 –
கலெக்டர் அழகுமீனா வெளியிட்டுள்ள செய்தி குறிப்பு: 2024-25 மற்றும் 2025-26ம் நிதி ஆண்டுக்கான முதலமைச்சர் மாநில விளையாட்டு விருதுக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. தமிழ்நாட்டில் வாழ்ந்து சாதனைகள் படைத்த தலைசிறந்த விளையாட்டு வீரர்கள் பன்னாட்டு அளவில் அங்கீகரிக்கப்பட்ட விளையாட்டுகளில் பதக்கமும் அதாவது உலகக்கோப்பை, தெற்காசிய விளையாட்டுப் போட்டிகள், தெற்காசிய கூட்டமைப்பு நாடுகளின் விளையாட்டுப் போட்டிகள், அங்கீகரிக்கப்பட்ட சம்பந்தப்பட்ட விளையாட்டு இணையங்களினால் நடத்தப்படும் தேசிய விளையாட்டுப் போட்டிகள் மற்றும் தேசிய சாம்பியன்ஷிப் போட்டிகளில் தனிநபர் போட்டிகளில் முதல் 3 இடங்களிலும் மற்றும் குழுப்போட்டிகளில் முதல் மற்றும் 2ம் இடமும் பெற்ற பெற்றிருத்தல் வேண்டும்.
விருதுக்கு விண்ணப்பிக்கும் தலைசிறந்த விளையாட்டு வீரர்கள் தமிழ்நாடு விளையாட்டு கழகம்/ மாவட்ட விளையாட்டு அலுவலர்/ முதன்மை கல்வி அலுவலர்/ முதன்மை உடற்கல்வி அலுவலர் (ஆடவர்/ மகளிர்) மூலமாகவும், விளையாட்டுப் போட்டிகளை நடத்தும் ஒரு நடத்துநர் / ஒரு நிர்வாகி / ஒரு ஆதரவளிக்கும் நிறுவனம் / மற்றும் ஒரு நன்கொடையாளர் / ஒரு ஆட்ட நடுவர் / நடுவர் / நீதிபதி ஆகியோர் உரிய வழிமுறையாகவும் விண்ணப்பங்கள் அனுப்ப வேண்டும்.
விண்ணப்ப படிவம் மற்றும் விரிவான விதிமுறைகள் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய www.sdat.tn.gov.in என்ற இணையதளம் மூலம் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். ஆகஸ்ட் 11 கடைசி நாள். மேலும் விவரங்களுக்கு குமரி மாவட்ட விளையாட்டு அலுவலகத்தை நேரிலோ அல்லது 04652 262060 என்ற தொலைபேசி எண்ணிலோ தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.