திருப்பூர், ஜூலை 28 –
முக்குலத்தோர் தேசிய கழக நிறுவன தலைவர் எஸ்.பி. ராஜா தேவர் தலைமையில்
திருப்பூர் புதிய பேருந்து அருகே உள்ள மாநில தலைமை அலுவலகத்தில் மாநில நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. அதில் திருப்பூர் அவிநாசி சாலையில் இருந்து பி.என் ரோடு சாலை இணைக்கும் பிஷப் ஸ்கூல் 60 அடி சாலை சாலையோர ஆக்கிரமிப்பு அகற்றி அடிக்கடி நடைபெறும் வாகன விபத்திலிருந்து பொதுமக்களை பாதுகாக்க வேண்டும் எனவும் வருகின்ற செப்டம்பர் 1 காத்தப்ப பூலித்தேவன் பிறந்தநாள் விழாவின் முன்னிட்டு திருப்பூர் புதிய பேருந்து நிலையத்தில் ஐம்பெரும் விழா நடத்துவது, அன்று நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா 13 மாவட்டங்களில் சிறப்பாக செயல்படும் மாவட்ட நிர்வாகிகள் தலைமையில் மாவட்ட மாநாடு, மேலும் 2026 அடுத்த ஆண்டு நடைபெறும் சட்டமன்றத் தேர்தலை ஒட்டி முக்குலத்து சமுதாய மக்களுக்கு யார் ஆதரவு தருகிறார்களோ அவர்களுடன் கூட்டணி வைப்பது உள்ளிட்ட தீர்மானங்களை நிறைவேற்றி பல்வேறு ஆலோசனைகளை நிறுவனத் தலைவர் எஸ்.பி. ராஜா அவர்கள் வழங்கினார்.
இதில் மாநில இளைஞரணி செயலாளர் விஜய கண்ணன், கொங்கு மண்டல அமைப்புச் செயலாளர் பிரபு தேவர், மாநகர மாவட்ட செயலாளர் விஜயகுமார், மாநகர் மாவட்டத் துணைச் செயலாளர் ஜெய பிரகாஷ், கிழக்கு மாவட்ட கழக செயலாளர் அபு, மேற்கு மாவட்ட கழக செயலாளர் கருத்த பாண்டி, மோட்டார் தொழிற்சங்க தலைவர் வீரமணி, மோட்டார் தொழிற்சங்க மாவட்டச் செயலாளர் வீரா மற்றும் கழகப் பொறுப்பாளர்கள், மோட்டார் தொழிற்சங்க பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர்.