மார்த்தாண்டம், செப். 1 –
மார்த்தாண்டத்தில் ரோட்டில் கிடந்த இரண்டு செல்போனை இன்ஸ்பெக்டர் முன்னிலையில் அதிமுக பிரமுகர் ஜாண் உரியவரிடம் ஒப்படைத்தார். அதிமுக பிரமுகர் ஜாண் இன்று பிற்பகல் மார்த்தாண்டம் வரும்போது நடுரோட்டில் இரண்டு செல்போன் கிடந்தது. அதை எடுத்த ஜாண் மார்த்தாண்டம் போலீஸ் ஸ்டேஷனில் இன்ஸ்பெக்டர் வேளாங்கண்ணி உதய ரேகாவிடம் ஒப்படைத்தார்.
போலீசார் விசாரித்ததில் ஐரேனிபுரத்தைச் சேர்ந்த சில்வெஸ்டார் உடையது என தெரியவந்தது. இவர் பைக்கில் வரும்போது பாக்கெட்டில் இருந்து கீழே விழுந்து உள்ளது. இவருக்கு தகவல் கொடுக்கப்பட்டு இன்ஸ்பெக்டர் வேளாங்கண்ணி உதய ரேகா முன்னிலையில் ஜாண் இரண்டு செல்போனையும் சில்வெஸ்டரிடம் ஒப்படைத்தார். ஜாணின் நேர்மையை போலீசார் பாராட்டினர்.



