தஞ்சாவூர், ஜூலை 10 –
மானியத்தில் மின் மோட்டார்கள் அமைக்க விவசாயிகள் விண்ணப்பிக்கலாம் என்று கலெக்டர் ரேவதி கூறி உள்ளார். தஞ்சாவூர் மாவட்ட கலெக்டர் ரேவதி விடுத்துள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது: தஞ்சாவூர் மாவட்டத்தில் ஆழ் துளை கிணறு மூலம் நீர்பாசனம் மேற்கொள்ளும் விவசாயிகளுக்கு ரூபாய் 15 ஆயிரம் மானியத்தில் மின் மோட்டார் பம்புசெட்டுகள் அமைப்பதற்கான திட்டம் வேளாண் மை பொறியியல் துறை மூலம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்தத் திட்டத்தின் மூலம் பயனடையும் விவசாயிகள் சொந்த பாசனம் அல்லது நெளி பங்கு பாசன அமைப்புக்கு வேளாண் மைத் துறை அல்லது தோட்டக்க லை துறை மூலம் செயல்படுத்தப்பட்ட வரும் நுணணீர் பாசனத்திட்டத்தின் மூலம் பயனடைந்திருக்க வேண்டும்.
மேலும், மின்சார பயன்பாட்டுத் திறனை அதிகரித்தல், நீர் பயன்பாட்டுத் திறனை மேம்படுத்தி பயிர் உற்பத்தி மற்றும் பாசன பரப்பை அதிகரித்தல், பழைய திறன் குறைந்த மின் மோட்டார்களை மாற்றி புதிய மின் மோட்டார்கள் வாங்குவதற்கு இம்மானிய திட்டத்தின் கீழ் ரூபாய் 15,000 அல்லது மின் மோட்டாரில் மொத்த விலையில் 50 சதவீதம் ஆகியவற்றில் எது குறைவோ அதனை மானியமாக வழங்கப்படும்.
இத்திட்டத்தின் பயனடைய விரும்பும் விவசாயிகள் விண்ணப்பத்துடன் தங்களுடைய ஆழ்துளை கிணறு அமைத்துள்ள நிலத்திற்கான சிட்டா, அடங்கல், நிலவரை படம், மின்சார இணைப்பு அட்டை நகல், வங்கி புத்தகம் முதல் பக்கம் மற்றும் வேளாண்மை பொறியியல் துறையால் அங்கீகரிக்கப்பட்ட 4 ஸ்டார் திறன் குறியீடுடைய மின் மோட்டார் களின் மாதிரிகளை விற்பனை செய்யும் அங்கீகாரம் பெற்ற நிறுவனங்களிடம் இருந்து பெறப்பட்ட ஆவணங்களை இணைத்து விண்ணப்பிக்கலாம்.
இதுகுறித்து மேலும் விவரங்களுக்கு தஞ்சாவூர், ஒரத்தநாடு, திருவையாறு, பூதலூர் மற்றும் திருவோணம் வட்டாரங்களை சேர்ந்த விவசாயிகள் உதவி செயற்பொறியாளர் (வேளாண்மை பொறியியல்) அலுவலகம் என் 15 கிருஷ்ணா நகர், மனோஜிப் பட்டி சாலை, தஞ்சாவூர் 613004 என்ற முகவரியிலும் தொடர்பு கொண்டு பயனடையலாம்.
கும்பகோணம், அம்மாபேட்டை, பாபநாசம் ,திருவிடைமருதூர், மற்றும் திருப்பனந்தாள் வட்டார ங்களை சேர்ந்த விவசாயிகள் உதவி செயற்பொறியாளர் (வேளாண் பொறியியல்) அலுவலகம் தொழில் பேட்டை அருகில் திருவோணம் திருவிடைமருதூர் தாலுகா கும்பகோணம் 612103 என்ற முகவரியிலும், பட்டுக்கோட்டை மதுக்கூர், பேராவூரணி மற்றும் சேதுபாவாசத்திரம் வட்டாரங்களை சேர்ந்த விவசாயிகள் உதவி செயற்பொறியாளர் (வேளாண் பொறியியல்) அலுவலகம் ஒருங்குமுறை வளாகம் பாளையம் பட்டுக்கோட்டை 614601 என்ற முகவரியில் தொடர்பு கொண்டு பயனடையலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.



