கன்னியாகுமரி, ஜுலை 8 –
19-வது சப் ஜூனியர் மாநில அளவிலான அட்யா பட்யா சேம்பியன்ஷிப் போட்டிகள் தேனி மாவட்டத்தில் நடைபெற்றது. தமிழகம் முழுவதும் பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஆண்-பெண் அணிகள் கலந்து கொண்டன. இதில் கன்னியாகுமரி மாவட்டத்தில் இருந்து பங்குபெற்ற பெண்கள் அணியினர் இரண்டாம் இடத்தைப் பிடித்து வெள்ளிப் பதக்கமும் பரிசு கோப்பையும் பெற்றனர். வெற்றி பெற்ற வீராங்கனைகளையும், அணி மேலாளர் திருமதி. எம் ஷைனி, பயிற்சியாளர் திரு. எஸ்.பி. ஆதிவிஷ்ணு குமார் ஆகியோரை மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலர் திருமதி. வினு அவர்களும் கன்னியாகுமரி மாவட்ட அட்யா-பட்யா அசோசியேசன் செயலாளர் – கலைவளர்மணி எம். ஜெயராஜ், தலைவர் திரு. டி விஜேஷ், துணைத்தலைவர் திரு. எ. ராமநாகராஜன், திரு. கே. அசோக்குமார் பொருளாளர் – திரு. விக்னேஷ், கௌரவ தலைவர் திரு அர்னால்டு அரசு மற்றும் நிர்வாகிகள் பாராட்டி வாழ்த்து தெரிவித்தனர்.
இந்தியா முழுவதும் மிகவும் பிரபலமாக விளையாடப்பட்டு வரும் இந்த விளையாட்டில் பங்கு பெற்று வெற்றி பெறும் மாணவர்களுக்கு கல்லூரி மேற்படிப்புகள் உட்பட மத்திய அரசுத்துறை வேலைவாய்ப்பிலும் இட ஒதுக்கீடு வழங்கியிருப்பது ஒரு சிறப்பம்சமாகும். மேற்கண்ட தகவலை மாவட்ட அட்யா பட்யா கழகச் செயலாளர் கலைவளர்மணி எம். ஜெயராஜ் தெரிவித்தார்.