சுசீந்திரம், ஜீலை 25 –
சுசீந்திரம் நங்கை நகர் முதல் தெருவில் வசித்து வருபவர் நாகேஸ்வரி (48). இவரது தம்பி முருகன் (41). இவர் கொத்தனார் வேலை செய்து வருகிறார். திருமணமாகி கணவன் மனைவிக்கு இடையே கருத்து வேறுபாடு காரணமாக மனைவி இவரை விட்டு பிரிந்து சென்று விட்டார். இதனால் மன விரக்தியில் இருந்தவர் அதிகமாக குடித்து வந்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில் நேற்று சுசீந்திரம் பைபாஸ் ரோடு இளைய நயினார் புதூர் பகுதியில் முருகன் விஷம் அருந்தி கிடப்பதாக நாகேஸ்வரிக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. தகவல் அறிந்த நாகேஸ்வரி சம்பவ இடம் சென்று தனது தம்பியை பார்க்கும்போது அவர் ஏதோ விஷம் அருந்தி இறந்து கிடந்து உள்ளது தெரிய வந்துள்ளது. இது குறித்து சுசீந்திரம் காவல் நிலையத்தில் நாகேஸ்வரி புகார் அளித்துள்ளார். புகாரின் பெயரில் சுசீந்திரம் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.