சுசீந்திரம், ஏப். 18 –
சுசீந்திரம் அருகே உள்ள மேல மணக்குடி வடக்கு தெருவை சார்ந்தவர் அமல்ராஜ் (44). இவரது மகன் தற்போது டுட்டோரியலில் படித்து பத்தாம் வகுப்பு தேர்வு எழுதி உள்ளார்.
சிறுவயதுமுதலே குடிப்பழக்கத்திற்கு அடிமையான இவரது 17 வயது மகன் மனவிரக்தியில் இருந்து வந்துள்ளார். நேற்று தனது படுக்கை அறையில் உள்ள மின்விசிறியில் உள்ள ஊக்கில் தூக்கு போட்டு தொங்கிய நிலையில் கிடந்துள்ளார்.
இது குறித்து அவரது தந்தை அமல்ராஜ் சுசீந்திரம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார் புகாரின் பேரில் சுசிந்திரம் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்


