மதுரை, ஜூலை 30 –
மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை 2024-2026-ம் ஆண்டிற்கான சட்டப்பேரவை அவைக் குழுத் தலைவர் இ. பரந்தாமன் (எழும்பூர் சட்டமன்ற உறுப்பினர்) மற்றும் மதுரை மாவட்ட ஆட்சித் தலைவர் கே.ஜே. பிரவீன் குமார்,
ஆகியோர் தலைமையில் குழு உறுப்பினர்களாகிய பெ.சு.தி. சரவணன் (கலசபாக்கம்), க. சிவகாமசுந்தரி (கிருஷ்ணராயபுரம்), கே. பொன்னுசாமி (சேந்தமங்கலம் (தனி), செ. முருகேசன் (பரமக்குடி (தனி), மா. செந்தில்குமார் (கள்ளக்குறிச்சி (தனி), T.M. தமிழ்செல்வம் (ஊத்தங்கரை (தனி), அ. நல்லதம்பி (கங்கவல்லி), M. ராஜமுத்து (வீரபாண்டி), பொன்.ஜெயசீலன் (கூடலூர்), S. ராஜகுமார் (மயிலாடுதுறை) ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் உசிலம்பட்டி சட்டமன்ற உறுப்பினர்
பி. அய்யப்பன், திட்ட இயக்குநர் (ஊரக வளர்ச்சி முகமை) வானதி ஆகியோர் உட்பட அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.