நாகர்கோவில், செப். 25 –
கன்னியாகுமரிமாவட்டம் ஈத்தாமொழி அருகே உள்ள புதூர் ஸ்ரீ புதுமால் சுவாமி கோவிலில் புரட்டாசி தேர்த்திருவிழா ஆண்டுதோறும் நடைபெறுவது வழக்கம் அந்த வகையில் இந்த ஆண்டுக்கான திருவிழா 23-ம் தேதி தொடங்கி வருகிற 2-ம் தேதி வரை நடைபெற உள்ளது. மேலும் இளைஞர் நற்பணி மன்றம் மற்றும் ஊர் பொதுமக்கள் இணைந்து நடத்திய 7001 திருவிளக்கு பூஜை வழிபாட்டை பார்வதிபுரம் சாரதா தேவி ஆசிரமம் சித்தாந்த ரெத்தினம் அன்புமதி நிகழ்த்தினார். சென்னை நித்தியா சிட்டிபாபு முதல் குத்துவிளக்கை ஏற்றி தொடங்கி வைத்தார்.
திருவிளக்கு பூஜை வழிபாட்டிற்கு குமரி மாவட்டத்தில் உள்ள பல்வேறு ஊர்களில் இருந்து பெண்கள் வந்து கலந்து கொண்டனர்.இதில் அதிக விளக்குகள் கொண்டு வந்த ஊர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது, முதல் பரிசு 3 கிராம் தங்க நாணயம்,இரண்டாம் பரிசு 2 கிராம் தங்க நாணயம்,மூன்றாம் பரிசு ஒரு கிராம் தங்க நாணயம், நான்காம் பரிசு ₹ ஐந்தாயிரம் என வழங்கப்பட்டது மேலும் திருவிளக்கு பூஜையை ஊர் தலைவர் டாக்டர். சிவகுமார் குத்து விளக்கேற்றி துவக்கி வைத்தார்,



