சென்னை, ஜூன் 15 –
இந்திய இல்லங்களில் மிகவும் நம்பகமான பெயர்களில் ஒன்றாக அறியப்படும் பிரிட்டானியா, மற்றமொரு தயாரிப்பை “பிரிட்டானியா சத்வம் ப்யூர் பசு நெய்யிலும் கொண்டு வந்துள்ளது. பிரிட்டானியா ‘சத்வம்’ ப்யூர் பசு நெய்யானது ‘ வீட்டில் தயாரிக்கப்பட்ட நெய் போன்ற அதே தரத்துடன் தயாரிக்கப்படுகிறது. இந்திய இல்லங்களில் நெய் தயாரிக்கும் பாரம்பரிய முறையால் ஈர்க்கப்பட்டு, அதனை அடிப்படையில் நுணுக்கமான உற்பத்தி செயல்முறையை பிரிட்டானியா வடிவமைத்துள்ளது.
“பிரிட்டானியா சத்வம் நெய்யானது உற்பத்தியின் ஒவ்வொரு கட்டத்திலும் தூய்மை, தரம் மற்றும் கட்டுப்பாட்டிற்கான மேம்பட்ட தரநிலைகளை உறுதியாக பின்பற்றுகிறது. 105 டிகிரி செல்சியஸுக்கு மேலான வெப்பநிலையில் தயாரிக்கப்படும் சத்வம் நெய் அதன் தனித்துவமான அசல் நறுமணத்தையும், மிகுந்த சுவையையும் சீராகப் பெறுகிறது.
3000-க்கும் மேற்பட்ட விவசாயிகளுக்கு ஆதரவளிக்கும் வகையில் பிரிட்டானியா செயல்படுத்தி வரும் பசும்பால் கொள்முதல் திட்டமானது நெய்யின் உயர் தரத்தினை உறுதி செய்வதற்கு மேலும் வலுசேர்க்கிறது.
பிரிட்டானியா சத்வம் ப்யூர் பசு நெய் பின்வரும் விலைகளில் சௌகரியமான அளவுகளில் கிடைக்கிறது. 200 மி.லிபேக் ₹250; 500 மி.லி பேக் ₹450: 1 லிட்டர் பேக் ₹830. இந்திய குடும்பங்களின் பல்வேறு தேவைகள் மற்றும் பயன்பாட்டு விருப்பங்களை பூர்த்தி செய்யும் ஒரு சிறந்த, சுத்தமான நெய்யாக பிரிட்டானியா சத்வம் இருக்கும்.



