கிருஷ்ணகிரி, செப். 19 –
கிருஷ்ணகிரி நகராட்சி அலுவலகத்தில் தமிழக அரசின் உங்களுடன் ஸ்டாலின் சிறப்பு முகாம் இன்று நடைபெற்றது. இந்த முகாமில் 10-வது வார்டு பொது மக்கள் கலந்து கொண்டு மனு வழங்கலாம் என அறிவிக்கப்பட்டது.
இந்த நிலையில் 10-வது வார்டு நகரமன்ற உறுப்பினராக பாஜகவை சேர்ந்த சங்கர் பணியாற்றி வருகிறார். இந்த முகாம் குறித்து தகவல் ஏதும் வழங்கவில்லை என்று கூறி நகராட்சி ஆணையாளர் ஸ்டாலின் பாபுவிடம் முறையிட்டுள்ளார். நகராட்சி ஆணையாளர் அவமானப்படுத்தியதாக கூறி பாஜக மாநில செயலாளர் கோவிந்தராஜ் தலைமையில் ஆணையாளரை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
இது குறித்து கூறிய பாஜகவினர்., பாஜக நகர் மன்ற உறுப்பினர் என்ற முறையில் தகவல் தெரிவித்தால் தான் எங்களது பகுதியில் உள்ள மக்கள் பயன்பெறும் வகையில் உதவிட முடியும். ஆனால் முறையான தகவல் எங்கள் பகுதிக்கு சொல்வதில்லை. இது குறித்து ஆணையாளரிடம் கேட்டால் ஒருமையில் பேசுவதாகவும் குற்றம் சாட்டினர். இந்த நிகழ்ச்சியில் பாஜக நகர தலைவர் விமலா உள்ளிட்ட பலர் இருந்தனர்.



