இரணியல், டிச. 1 –
இரணியல் அருகே உள்ள கண்டன் விளை சாலையில் பலசரக்கு கடை நடத்தி வருபவர் பாஸ்கர் (49). இவர் கடந்த சில நாட்களுக்கு முன் மதிய உணவு சாப்பிட சென்று விட்டு திரும்பி கடைக்கு வந்த போது கடையின் வெளியே இருந்த முழு சாக்கு சின்ன வெங்காயம் மூடை காணாதது கண்டு அதிர்ச்சி அடைந்தார். அப்போது கடையில் இருந்த சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகளை பார்த்த போது மர்ம நபர் ஒருவர் கடை உரிமையாளரை அழைத்து விட்டு அங்கு இங்கு பார்த்து விட்டு வெங்காயம் மூடை தனது மோட்டார் சைக்கிளில் எடுத்து சென்றது தெரியவந்தது.
இதனை அடுத்து இரணியல் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இரணியல் போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் சேவியர் பிராங்க்ளின் வழக்கு பதிவு செய்து வடக்கு நுள்ளி விளை பகுதியில் சேர்ந்த தனபால்52 என்பவரை கைது செய்து மோட்டார் சைக்கிள் பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்



