கிருஷ்ணகிரி, செப். 13 –
கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்டம் பர்கூர் மேற்கு ஒன்றிய பாமக சார்பில் உறுப்பினர் சேர்க்கை ஆலோசனை கூட்டம் ஐகொத்தப்பள்ளி பஞ்சாயத்து சீனிவாசபுரம் சமுதாயக்கூடத்தில் ஒன்றிய கழக செயலாளர் முனியப்பன் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட செயலாளர் பழனிவேல் பேசும்போது: அதிகப்படியான உறுப்பினர் சேர்க்கை, திண்ண பிரச்சாரம், கிராம கூட்டம் மற்றும் கட்சி வளர்ச்சி குறித்து சிறப்புரையாற்றினார்.
மாவட்ட தலைவர் த. ஆறுமுகம், மாவட்ட அமைப்பு தலைவர் பி.ஜி. அண்ணாமலை, உழவர் இயக்க மாநில தலைவர் புறா ரவி, மாநில துணை செயலாளர் புல்லட் கணேசன், மொரப்பூர் முன்னாள் துணை சேர்மேன் வன்னிய பெருமாள், மாவட்டத் துணைச் செயலாளர்கள் எஸ். பெரியண்ணன், திருப்பதி ஆகியோர் கலந்து கொண்டு ஆலோசனை வழங்கினர். ஒன்றிய செயலாளர் முரளி, ராஜேந்திரன், எம். செல்வம், ஆசிரியர் மணி, மாதேஸ்வரன், மணிகண்டன் உள்பட நூற்றுக்கும் மேற்பட்ட நிர்வாகிகள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.



