பரமக்குடி, ஆக. 9 –
ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பரமக்குடி ஆயிர வைசிய மேல்நிலைப் பள்ளியில் நலம் காக்கும் ஸ்டாலின் மருத்துவ முகாமினை
பரமக்குடி சட்டமன்ற உறுப்பினர் முருகேசன் குத்துவிளக்கு ஏற்றி துவக்கி வைத்தார். முகாமில் பொது மருத்துவம், ரத்தம், சர்க்கரை, எலும்பு முறிவு ஸ்கேன், நரம்பியல் உள்ளிட்ட பல்வேறு சிகிச்சைகள் இலவசமாக பார்க்கப்பட்டது.
மருத்துவ முகாமினை மாவட்ட ஆட்சியர் சிம்ரன்ஜீத் சிங் காலோன் கலந்து கொண்டு சிகிச்சை மற்றும் வசதிகள் குறித்து கேட்டறிந்தார். இதில் இரண்டாயிரத்துக்கு மேற்பட்ட பொதுமக்கள் இலவச மருத்துவம் பெற்று பயன்பெற்றனர்.
இந்நிகழ்வில் மாவட்ட சுகாதார அலுவலர் லட்சுமி நாராயணன், பரமக்குடி வட்டார மருத்துவ அலுவலர் சுகந்தி போஸ், மருத்துவர்கள் கார்த்திக், ஜெயந்த், கிருபா, சுபஸ்ரீ, ராஜேஷ், நிவேநிதா, ராமச்சந்திரன் மற்றும் பரமக்குடி நகர் மன்ற தலைவர் சேது கருணாநிதி, முன்னாள் அமைச்சர் சுந்தராஜன், பரமக்குடி வடக்கு நகர கழக செயலாளர் ஜீவரத்தினம், நகர்மன்றத் துணைத் தலைவர் குணா, ஆயிர வைசிய சபைத் தலைவர் பாலுசாமி, ஆயிர வைசிய சபை இணைத் தலைவர் ராசி என். போஸ், நகர்மன்ற உறுப்பினர் எஸ்.ஆர். சதீஸ்குமார், அறங்காவலர் குழு உறுப்பினர் இளையராஜா மற்றும் கழக நிர்வாகிகள், பொதுமக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.