By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: நேபாளத்தில் கோர வெள்ளம்: 469 பேர் பலி; 667 சுற்றுலாப் பயணிகள் மாயம்!
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > உலகம் > நேபாளத்தில் கோர வெள்ளம்: 469 பேர் பலி; 667 சுற்றுலாப் பயணிகள் மாயம்!
உலகம்

நேபாளத்தில் கோர வெள்ளம்: 469 பேர் பலி; 667 சுற்றுலாப் பயணிகள் மாயம்!

Last updated: August 28, 2026 1:10 pm
August 28, 2026
10 Views
Share
SHARE

காத்மாண்டு: ஆக.28.

நேபாளத்தில் கடந்த புதன்கிழமை ஏற்பட்ட திடீர் வெள்ளப்பெருக்கு பெரும் பேரழிவை ஏற்படுத்தியுள்ளது. சீனாவின் திபெத் எல்லையை ஒட்டிய ரசுவா மாவட்டத்தில் உள்ள போட்டேகோஷி ஆற்றில் ஏற்பட்ட வெள்ளத்தில் வீடுகள், கடைகள், விடுதிகள், அரசு கட்டிடங்கள், பாலங்கள் உள்ளிட்ட பல்வேறு கட்டமைப்புகள் அடித்துச் செல்லப்பட்டன. வெள்ளம் சீறிப்பாய்ந்ததால் பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல முயன்ற பலரும் நீரில் அடித்துச் செல்லப்பட்டனர்.

Contents
4,348 காவலர்கள் தேடுதல் பணிவெளிநாட்டு உதவி தேவையில்லை – நேபாளம்களத்தில் யுனிசெஃப்; இங்கிலாந்து நிதியுதவி

இந்த பேரழிவில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 469 ஆக அதிகரித்துள்ளதாக நேபாள காவல்துறை தெரிவித்துள்ளது. ரசுவா, நுவாகோட், தாடிங், சித்வான், கோர்க்கா உள்ளிட்ட 11 மாவட்டங்களில் இருந்து உடல்கள் மீட்கப்பட்டு வருகின்றன. காணாமல் போனவர்களைத் தேடும் பணியில் காவல்துறை, ராணுவம் உள்ளிட்ட பாதுகாப்புப் படையினர் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

4,348 காவலர்கள் தேடுதல் பணி

காணாமல் போனவர்களைத் தேடும் பணியில் 4,348 காவல்துறை அதிகாரிகள் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக நேபாள காவல்துறை தெரிவித்துள்ளது. வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் இருந்து இதுவரை 50 வெளிநாட்டினர் உட்பட 796 பேர் ஹெலிகாப்டர்கள் மூலம் மீட்கப்பட்டுள்ளனர். மேலும் 796 பேர் தரை மார்க்கமாக பாதுகாப்பான பகுதிகளுக்கு வெளியேற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே, நேபாளத்தில் சுற்றுலா சென்றிருந்த 127 நேபாளிகள் உட்பட மொத்தம் 667 சுற்றுலாப் பயணிகளின் நிலை தெரியவில்லை என அந்நாட்டு சுற்றுலாத்துறை தெரிவித்துள்ளது. முன்னதாக 31 சுற்றுலாப் பயணிகள் மீட்கப்பட்டுள்ளனர். அவர்களில் இந்தியா, தென் கொரியா, அமெரிக்கா, ரஷ்யா, இத்தாலி, பல்கேரியா, சுவிட்சர்லாந்து உள்ளிட்ட நாடுகளைச் சேர்ந்தவர்களும் உள்ளனர்.

வெளிநாட்டு உதவி தேவையில்லை – நேபாளம்

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மீட்புப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில், வெளிநாடுகளின் உதவி தற்போதைக்கு தேவையில்லை என நேபாள வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது. அந்நாட்டின் பாதுகாப்பு அமைப்புகள் தேடுதல் மற்றும் மீட்புப் பணிகளை திறம்பட மேற்கொண்டு வருவதாகவும், தற்போதைய சூழலில் வெளிநாட்டு உதவி தேவையில்லை என்றும் வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் பகதூர் சேத்ரி கூறியுள்ளார்.

களத்தில் யுனிசெஃப்; இங்கிலாந்து நிதியுதவி

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களின் நிலைமையை மதிப்பிடவும், இடம்பெயர்ந்த மக்களுக்கு அத்தியாவசிய உதவிகளை வழங்கவும் யுனிசெஃப் பிரதிநிதிகள் நுவாகோட் பகுதிக்கு சென்றுள்ளனர். நேபாள அரசுடன் ஒருங்கிணைந்து நிவாரணப் பணிகளை மேற்கொண்டு வருவதாக யுனிசெஃப் தெரிவித்துள்ளது.

இதற்கிடையே, நேபாள வெள்ளப்பெருக்கால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவும் வகையில் இங்கிலாந்து 5 மில்லியன் பவுண்டுகள் நிதியுதவி வழங்க முன்வந்துள்ளது. மேலும் அவசரகால மீட்புக் குழுவையும் அனுப்ப இங்கிலாந்து தயாராக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பேரழிவில் இங்கிலாந்தைச் சேர்ந்த 33 பேர் காணாமல் போயுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

நேபாளத்தில் தொடர்ந்து நடைபெற்று வரும் மீட்புப் பணிகளுக்கு இடையே, உயிரிழப்பு மற்றும் காணாமல் போனவர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக்கூடும் என்ற அச்சம் நிலவி வருகிறது. பாதுகாப்புப் படையினர் பல்வேறு பகுதிகளில் தீவிர தேடுதல் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

விளம்பரம்

You Might Also Like

தமிழர் நல்வாழ்வு பேரவை கத்தர் மண்டலம் நடத்திய குடியரசு தின விழா
இஸ்ரேல்-பாலஸ்தீன இரு நாடுகள் தீர்வுக்கான ஜூன் மாநாட்டை முன்னெடுத்து, நியூயார்க்கில் ஐ.நா. தலைமையகத்தில் இராஜதந்திரிகள் சந்திப்பு.
இஸ்ரேல்-காசா மோதல்
ரியாத் மத்திய மண்டலம் நசீம் ரவ்தா கிளை சார்பாக சூறாவளி சுற்று பயணம்!
கியேவின் இரவு நேர ட்ரோன் தாக்குதல்களுக்குப் பிறகு மாஸ்கோவின் முக்கிய விமான நிலையங்கள் மூடப்பட்டன.
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கனஂனியாகுமரிதமிழ்நாடு

குமரியில் தமிழக முதலமைச்சர் 2 நாள் சுற்றுப்பயணம்: 2500 போலீசார் பாதுகாப்பு: விழா மைதானத்தில் எஸ்பி ஸ்டாலின் ஆய்வு

February 23, 2026
77 Views
மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்
வெளிநாடு செல்லும் தமிழ்நாட்டு பொதுமக்கள் மற்றும் இளைஞர்கள் விழிப்புணர்வுடன் இருக்குமாறு அரியலூர் மாவட்ட ஆட்சித்தலைவரால் அறிவுறுத்தப்படுகிறது
அரசு உதவி பெறும்பள்ளி ஆசிரியர் பொதுக்குழு கூட்டம்
வாகன சோதனையில் சிக்கிய ஓட்டுனர் உரிமம்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account