கன்னியாகுமரி, செப்.14:
கன்னியாகுமரி மாவட்டம், சுசீந்திரம் அக்கரை பகுதியில் விநாயகர் சதுர்த்தி விழா ஆண்டுதோறும் வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது. அதன்படி, இந்த ஆண்டும் விநாயகர் கோவில் அருகே விவசாயம் செழிக்கவும், விவசாய நிலங்களை பாதுகாக்கவும் வேண்டி நெல்மணிகளால் விநாயகரின் முழு உருவ சிலை வடிவமைக்கப்பட்டு பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது.
இதையடுத்து, நெல்மணியால் வடிவமைக்கப்பட்ட விநாயகர் சிலைக்கு பொதுமக்கள் சிறப்பு பூஜைகள் செய்து வழிபட்டு வருகின்றனர். நெடுஞ்சாலை அருகே இந்த சிலை அமைக்கப்பட்டுள்ளதால், அவ்வழியாகச் செல்லும் பொதுமக்கள் ஆர்வத்துடனும் ஆச்சரியத்துடனும் பார்த்து, விநாயகரை வணங்கி செல்கின்றனர்.



