By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: நிலக்கோட்டை வட்டாட்சியர் அலுவலகத்தில் 300-க்கும் மேற்பட்டோர் உள்ளிருப்பு தர்ணா போராட்டம்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > திண்டுக்கல் > நிலக்கோட்டை வட்டாட்சியர் அலுவலகத்தில் 300-க்கும் மேற்பட்டோர் உள்ளிருப்பு தர்ணா போராட்டம்
திண்டுக்கல்

நிலக்கோட்டை வட்டாட்சியர் அலுவலகத்தில் 300-க்கும் மேற்பட்டோர் உள்ளிருப்பு தர்ணா போராட்டம்

Last updated: September 27, 2025 2:08 pm
September 27, 2025
53 Views
Share
SHARE

திண்டுக்கல், செப். 27 –

திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை அருகே உள்ள மல்லியம்பட்டி கிராமத்தில் சுமார் 500-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இக்கிராம பொதுமக்களின் காவல் தெய்வமான முத்தாலம்மன் கோவிலுக்கு சொந்தமான சுமார் 15-சென்ட் அளவுள்ள அரசு புறம்போக்கு நிலத்தை தனியார் சிலர் ஆக்கிரமித்துள்ளதாக கடந்த 2019 ஆம் ஆண்டு பொதுமக்கள் சார்பில் மாவட்ட ஆட்சியரிடம் புகார் அளித்துள்ளனர். மாவட்ட ஆட்சியரின் உத்தரவுப்படி அப்போதைய வட்டாட்சியர் தனுஷ்கோடி தலைமையிலான வருவாய்த் துறையினர் நிலத்தை அளந்து ஊர் பொதுமக்களிடம் ஒப்படைத்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில் கடந்த இரு தினங்களுக்கு முன்பு மீண்டும் அதே நபர் கோவிலுக்கு சொந்தமான அந்த இடத்தை தனக்கு சொந்தமானது என்று கூறி அந்த இடத்தில் செட் அமைத்துக் கொண்டு அதிலுள்ள 60-க்கும் மேற்பட்ட தென்னை மரத்தில் இருந்த தேங்காய்களை பறித்துக்கொண்டதாகவும் அப்பகுதியில் யாரையும் அனுமதிப்பதில்லை எனவும் கூறப்படுகிறது.

இதனை தட்டிக் கேட்ட ஊர் முக்கியஸ்தர்கள் சிலரை அவரது உறவினர்கள் நேற்று முன்தினம் தாக்கியதாகவும் அது குறித்து நிலக்கோட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்தும் காவல்துறையினர் நடவடிக்கை எடுக்காததால் நேற்று மல்லியம்பட்டியைச் சேர்ந்த பெண்கள் உட்பட 300க்கும் மேற்பட்ட பொதுமக்கள் நிலக்கோட்டை வட்டாட்சியரை சந்தித்து புகார் அளிக்க வந்தனர். அப்போது வட்டாட்சியர் இல்லாததாலும் மற்ற அதிகாரிகளும் உரிய பதில் அளிக்காததாலும், வட்டாட்சியர் அலுவலகத்திற்குள் அமர்ந்து திடீர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த டிஎஸ்பி செந்தில்குமார் தலைமையிலான காவல் துறையினர் பேச்சுவார்த்தை நடத்தியபோது கோவிலுக்கு சொந்தமான பொது இடத்தை ஆக்கிரமிப்பு செய்து கொண்டு பொதுமக்களை தாக்கும் ஆக்கிரமிப்பாளர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும், ஊருக்கு சொந்தமான அரசு புறம்போக்கு நிலத்தை மீட்டுத் தந்த பின்பே கலைந்து செல்வோம் என போராட்டத்தை தொடர்ந்தனர்.

இதனையடுத்து விரைந்து வந்த வட்டாட்சியர் விஜயலட்சுமி போராட்டக்காரர்களிடம் நடத்திய பேச்சு வார்த்தையில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்ததையடுத்து பொதுமக்கள் அனைவரும் கலைந்து சென்றனர். இதனால் அப்பகுதியில் சுமார் 2 மணி நேரத்திற்கு மேலாக பரபரப்பான சூழ்நிலை காணப்பட்டது.

விளம்பரம்

You Might Also Like

நடிகர் சங்க கலைஞர்களுக்கு பொங்கல் பரிசு
தன்னுடைய வார்டில் தூய்மை பணி
வழக்கறிஞர்கள் உண்ணாவிரதம்
ஹாக்கி லீக் போட்டிகள் பரிசளிப்பு விழா
காளியம்மன் கோவில் மஹா கும்பாபிஷேக விழா
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கனஂனியாகுமரிதமிழ்நாடு

மழைநீர் தேங்கி பழுதான மாநகர சாலைகள் : கண்டுகொள்ளாத மக்கள் பிரதிநிதிகள்: வரிப்பணம் வீணடிக்கப்படுவதாக பொதுமக்கள் குற்றச்சாட்டு

November 25, 2025
93 Views
குறுவைத் தொகுப்பு திட்டத்தில் 80 சதவீத பதிவு பணிகள் நிறைவு: வேளாண் இயக்குனர் முரளிதரன் தகவல்
ஞாயிற்றுக்கிழமையும் சுமார் 8 கிலோமீட்டர் நடை
அரசு மருத்துவமனையில் மருத்துவர்கள் பற்றாக்குறை
கண்காணிப்பு கேமரா பொருத்தும் பணி நடைபெற்றது
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account