நாகர்கோவில், செப்டம்பர் 10 –
நாகர்கோவிலில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் விற்பனை நடைபெறுவதாக வந்த புகார்களின் அடிப்படையில் நாகர்கோவில் மேயர் மகேஷ், ஆணையர் நிஷாந்த் கிருஷ்ணா உத்தரவின் பேரில் மாநகர நகர் நல அலுவலர் டாக்டர் ஆல்பர் மதியரசு மற்றும் சுகாதார அலுவலர்கள் மீனாட்சிபுரம், அவ்வை சண்முகம் சாலை உள்ளிட்ட பகுதிகளில் உள்ள கடைகளில் அதிரடி சோதனை நடத்தினர்.
இதில் ஒரு கடையில் இருந்து தடை செய்யப்பட்ட 25 கிலோ பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு ரூ.5 ஆயிரம் அபராதம் விதித்தனர். மற்றொரு கடையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு உணவு பாதுகாப்புத் துறை அலுவலர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.


