திருப்பூர், செப்டம்பர் 08 –
தேமுதிக திருப்பூர் மாநகர் மாவட்ட தெற்கு தொகுதி வடக்கு தொகுதி காங்கேயம் தொகுதி பெருந்துறை தொகுதி (ஊத்துக்குளி ஒன்றியம்) பல்லடம் தொகுதி (மாநகராட்சி 10 வார்டுகள் 3 ஊராட்சிகள்) 2026 சட்டமன்ற தேர்தல் பூத் கமிட்டி ஆலோசனை கூட்டம் கொங்கு கலையரங்கம் மஹாலில் திருப்பூர் மாநகர் மாவட்ட கழக செயலாளர் விசைத்தறி பி.ஆர். குழந்தைவேல் அவர்கள் தலைமையில் நடைபெற்றது. பாண்டியன் நகர் பகுதி செயலாளர் சரவணன் வரவேற்புரையாற்றினார். மாநில கழக இளைஞரணி துணைச் செயலாளர் ராயபுரம் ஆனந்த், சட்டமன்ற பொறுப்பாளர்கள் மாவட்ட பொருளாளர் பொட்டு காளியப்பன், மாவட்டத் துணைச் செயலாளர் வசந்த் யுவராஜ், முன்னிலை வகித்தனர். சிறப்பு அழைப்பாளர்களாக இதில் கழக கொள்கை பரப்பு செயலாளர் மேற்கு மண்டல தேர்தல் பொறுப்பாளர் முன்னாள் சட்ட மன்ற உறுப்பினர் அழகாபுரம் ஆர். மோகன்ராஜ், கழக தேர்தல் பணிக்குழு செயலாளர் மேற்கு மண்டல தேர்தல் துணை பொறுப்பாளர் எஸ். கணேசன், கழக தொழிற்சங்க பேரவை துணை செயலாளர் திருப்பூர் மாநகர் மாவட்ட தேர்தல் பொறுப்பாளர் முருகராஜ் பல்வேறு ஆலோசனைகளை வழங்கினார்கள்.
இந்த நிகழ்வில் பகுதி கழகச் செயலாளர்கள் ஆனந்த், சண்முகராஜா, சரவணன், மோகன்ராஜ், ரத்தினம் கண்ணன், விகாசினி தேவேந்திரன், மணி, ஒன்றிய செயலாளர்கள் ரவிச்சந்திரன், சண்முகம், வேலுச்சாமி, நகரச் செயலாளர்கள் இதயத்துல்லா, ரவி, பேரூர் கழகச் செயலாளர்கள் பொன்னுச்சாமி, ஜெய்சங்கர்,
மாவட்ட நிர்வாகிகள் ராமகிருஷ்ணன், சாஸ்தா செந்தில், சிவராஜ், கண்ணன், சுப்பிரமணி, கணேசன், கோபாலகிருஷ்ணன், சத்தியராஜ், சுமதி, புனிதா, ராஜேஸ்வரி, மல்லிகா, ஜுனத்பேகம் மற்றும் மகளிர் அணியினர், மாநில மாவட்ட பேரூர் ஒன்றிய நகர பகுதி நிர்வாகிகள், வட்டக் கழக நிர்வாகிகள், கழக சார்பு அணி நிர்வாகிகள் நூற்றுக்கும் மேற்பட்டோர் திரளாக பங்கேற்றனர்.



