By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: தேனி மற்றும் இடுக்கி மாவட்ட ஆட்சியர்கள் தலைமையில் மங்கலதேவி கண்ணகி கோயில் விழா முன்னேற்பாடு பணிகள் குறித்த கூட்டம்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாநிலம் > தமிழ்நாடு > தேனி மற்றும் இடுக்கி மாவட்ட ஆட்சியர்கள் தலைமையில் மங்கலதேவி கண்ணகி கோயில் விழா முன்னேற்பாடு பணிகள் குறித்த கூட்டம்
தமிழ்நாடுதேனி

தேனி மற்றும் இடுக்கி மாவட்ட ஆட்சியர்கள் தலைமையில் மங்கலதேவி கண்ணகி கோயில் விழா முன்னேற்பாடு பணிகள் குறித்த கூட்டம்

Last updated: April 17, 2026 6:53 pm
April 17, 2026
81 Views
Share
SHARE

தேனி, ஏப். 17 –

தேனி மாவட்டம், தமிழக-கேரள எல்லையில் அமைந்துள்ள மங்கலதேவி கண்ணகி கோயில் சித்திரை முழு நிலவு விழா வருகின்ற 1-ம் தேதி நடைபெறவுள்ளதை முன்னிட்டு, தேக்கடியில் உள்ள பெரியார் புலிகள் காப்பக மூங்கில் காடு அரங்கத்தில், முன்னேற்பாடு பணிகள் குறித்த ஒருங்கிணைப்புக்குழு கூட்டம் தேனி மாவட்ட ஆட்சித்தலைவர் ரஞ்ஜீத்சிங், மற்றும் இடுக்கி மாவட்ட ஆட்சித்தலைவர் தினேஷன் சேருவாட் ஆகியோர் தலைமையில் இடுக்கி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சாபூ மத்யூ சார் ஆட்சியர் அனுப்கார்க் ஆகியோர் முன்னிலையில் இன்று நடைபெற்றது.

மங்கலதேவி கண்ணகி கோயில் சித்திரை முழு நிலவு விழா ஆண்டுதோறும் சித்ரா பௌர்ணமி தினத்தன்று தமிழக-கேரள மக்களால் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. இவ்வாண்டு 01.05.2026 அன்று நடைபெற உள்ளதையொட்டி, திருவிழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபாடு செய்ய இருப்பதால் தமிழக மற்றும் கேரள பக்தர்கள் குமுளியில் இருந்து கோவிலுக்கு செல்லுவதற்கு ஏதுவாக போக்குவரத்து வசதி, சுகாதாரம், குடிநீர், தற்காலிக பந்தல்கள் மற்றும் கழிப்பிட வசதி, பாதைகள் செப்பனிடுதல் போன்ற பணிகள் மேற்கொள்வது குறித்து ஆலோசனைகள் மேற்கொள்ளப்பட்டது.

மேலும், கோயிலுக்கு வருகை தருகின்ற பக்தர்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்குவது, தேவையான அடிப்படை வசதிகளை ஏற்படுத்துவது குறித்து, சுகாதாரத்துறை மற்றும் தீயணைப்புத்துறை, வனத்துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளின் அலுவலர்களுடன் மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து எடுத்துரைக்கப்பட்டது.

பசுமை சோதனை சாவடிகள் அமைத்து, பக்தர்கள் தடைசெய்யப்பட்ட பிளாஸ்டி பொருட்களை கொண்டு செல்ல அனுமதிக்கக் கூடாது. வனப்பகுதியில் எளிதில் தீப்பற்றக் கூடிய பொருட்கள் பயன்படுத்துவதை தவிர்க்க உரிய இடங்களில் விழிப்புணர்வு பதாகைகளை வைத்தல் வேண்டும். மேலும், கோடைகால வெப்பத்தின் தாக்கம் அதிகமாக இருப்பதால் கூடுதலாக குடிநீர், உணவு, கழிவறை உள்ளிட்ட அனைத்து அடிப்படை வசதிகளும் செய்துதர நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. பக்தர்களின் பாதுகாப்பிற்காக போதிய அளவில் காவலர்களை சுழற்சி முறையில் நியமனம் செய்யப்பட உள்ளார்கள்.

கண்ணகி கோயில் சித்ராபௌர்ணமி திருவிழாவினை சிறப்பாக கொண்டாடிட பக்தர்கள் அனைவரும் இரு மாநில மாவட்ட நிர்வாகத்தின் வழிகாட்டுதலுக்கு முழு ஒத்துழைப்பினை வழங்கிட வேண்டும் என கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது.

இக்கூட்டத்தில், துணை இயக்குநர்கள் விவேக் பரஸ்நாத் யாதவ், ஆர்.லட்சுமி, மாவட்ட வன அலுவலர் கிரண், மருத்துவம் மற்றும் ஊரகநலப்பணிகள் இணை இயக்குநர் கலைச்செல்வி, துணை இயக்குநர் வரதராஜன், செய்தி மக்கள் தொடர் அலுவலர் ஏ.எடிசன், வட்டார போக்குவரத்து அலுவலர் மாணிக்கம் மற்றும் வருவாய்த்துறை, வனத்துறை, போக்குவரத்துத் துறை, சுகாதாரத்துறை உள்ளிட்ட இரு மாநில அரசு அலுவலர்கள் உள்ளிட்ட பலர் கலந்து
கொண்டனர்.

விளம்பரம்

You Might Also Like

தஞ்சாவூர் அடுத்துள்ள வல்லம் பெரியார் மணியம்மை நிகர் நிலை பல்கலைக்கழகத்தில் புரட்சி கவிஞர் பாவேந்தர் பாரதிதாசன் 136ம் ஆண்டு பிறந்தநாள் விழா
தருமபுரியில் தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் திமுக அரசை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம்
தருமபுரியில் தமிழ்நாடு அரசிற்கு நன்றி தெரிவித்து தமிழக நிருபர்கள் சங்கத்தின் 4 ஆம் ஆண்டு விழாவில் தீர்மானம்
நாகர்கோவில் சந்திப்பு ரயில் நிலையத்தில் வெடிகுண்டுகள் செயலிழப்பு ஒத்திகை
மணப்பாறை பேருந்தின் ஸ்டெப்னி டயர் வெடித்து விபத்து
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
தென்காசிமாவட்டம்

கனிம வளக் கொள்ளையை கண்டித்து மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்

March 8, 2025
71 Views
விளக்கப் புகைப்பட கண்காட்சி
பூனப்பள்ளி ஊராட்சி, சின்னபேலகொண்டப்பள்ளி
சுசீந்திரம் தாணுமாலயன் சுவாமி கோவில் ஆவணி திருவிழா
பள்ளி மற்றும் கல்லூரி விடுமுறை: கன்னியாகுமரியில் குவியம் சுற்றுலா பயணிகள்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account