கிருஷ்ணகிரி, ஜுலை 29 –
கிருஷ்ணகிரி மத்திய மாவட்ட தமிழக வெற்றி கழக மாவட்ட செயலாளர் சுரேஷ் தலைமையில் மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை அளித்தனர். அதில் கிருஷ்ணகிரி ஓசூர் தேசிய நெடுஞ்சாலையில் கடந்த மாதம் தொடர் விபத்து நடைபெற்றது. சாலை பணிகளில் ஏற்பட்ட தொய்வே காரணம் என குற்றம்சாட்டி தேசிய நெடுஞ்சாலையில் நடைபெறும் சாலை பணிகளை விரைந்து முடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், தேசிய நெடுஞ்சாலையில் உள்ள அட்டகுறுக்கி எனும் இடத்தில் பொதுமக்கள், மாணவ, மாணவிகள் தேசிய நெடுஞ்சாலை கடந்து தான் பள்ளிகளுக்கு செல்ல வேண்டும் என்ற நிலையில் மாவட்ட நிர்வாகம் ஆய்வு செய்து உடனடியாக நடைபாலம் அமைக்க தேசிய நெடுஞ்சாலை துறை மற்றும் மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மனுவில் குறிப்பிட்டுள்ளார்.
இது குறித்து செய்தியாளர்களிடம் சூளகிரி ஒன்றிய செயலாளர் பேசுகையில், மாவட்ட நிர்வாகம் உடனடியாக எங்கள் மனுக்களின் மீது நடவடிக்கை எடுத்து சரி செய்யவில்லை எனில் தமிழக வெற்றிக்கழக சூளகிரி ஒன்றியம் சார்பாக பொதுமக்களை திரட்டி மிகப்பெரிய ஆர்ப்பாட்டம் நடத்துவோம் என தெரிவித்தார். இந்த நிகழ்வில் தமிழக வெற்றி கழகத்தின் கிருஷ்ணகிரி மத்திய மாவட்ட செயலாளர் சுரேஷ், சூளகிரி ஒன்றிய செயலாளர் சிவராஜ், பசவராஜ், திம்மராஜ், ஒன்றிய நிர்வாகிகளான பார்த்தசாரதி, சபரி, சந்தோஷ் குமார், வி.சி.எம். முனிராஜ், பிரதீப், இளங்கோ, மாதவராஜ், ராஜ்குமார், ஹரிஷ், சதீஷ்பாபு, பிரசாந்த், நாகராஜ், சுரேஷ், வரதராஜன், துரை, லகுமன், கோகுல், சுதாகர், வெங்கடேஷ், ஜெயராம் பிரசாந்த், முரளி, கிருஷ்ணப்பா, ஆஞ்சி, கிரண், பிரவீன், கமலேஷ், வெங்கடேஷ், ராஜேஷ், பாலகிருஷ்ணன், ஸ்ரீநிவாஸ், அஸ்வின்குமார், பிரவீன், பெருமாள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.