தென்காசி, ஜுன் 24 –
தென்காசியில் திருநெல்வேலி கோட்டச் சங்க காப்பீட்டுக் கழக ஊழியர் சங்கத்தின் 32வது மாநாடு தனியார் மஹாலில் நடைபெற்றது. காப்பீட்டு கழக ஊழியர் சங்கத்தின் கோட்டத் தலைவர் முத்துக்குமாரசாமி மாநாட்டை துவக்கி வைத்தார். அகில இந்திய காப்பீட்டு ஊழியர்கள் சங்கத் தலைவர் ரமேஷ் மற்றும் சிஐடியு மாநிலத் தலைவர் சௌந்தரராஜன் ஆகியோர் சிறப்புரையாற்றினார்கள். காப்பீட்டுக் கழக ஊழியர் சங்கத்தின் மாநாடு துவங்குவதற்கு முன்பு காப்பீட்டுக் கழக ஊழியர் சங்க நிர்வாகிகளின் பேரணி தென்காசி பழைய பேருந்து நிலையத்தில் துவங்கி மாநாடு நடைபெற்ற தனியார் திருமண மஹாலில் நிறைவடைந்தது. கோட்டத் தலைவர் சுரேஷ்குமார், இணைச் செயாளர் பாலசுப்பிரமணியன், சங்க பொருளாளர் செல்வம், செந்தில், முத்து, சண்முக சுப்பிரமணியன், மதுபால், ராபின்சன், குழந்தைவேல் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினார்கள். காப்பீட்டுக் கழக ஊழியர் சங்க பொதுச் செயலாளர் பொன்னையா நன்றி உரையாற்றினார். காப்பீட்டுக் கழக ஊழியர் சங்க மாநாட்டில் முக்கிய தீர்மானங்களாக அந்நிய முதலீட்டை 100 சதவீதமாக உயர்த்துதல், தனியார் இன்சூரன்ஸ் நிறுவனங்களுக்கான மூலதன வரம்பை குறைத்தல் போன்ற தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. காப்பீட்டுக் கழக ஊழியர் சங்க மாநாடு ஜூன் 21 மற்றும் 22 இரு தினங்கள் தென்காசியில் நடைபெற்றது. மாநாட்டில் திருநெல்வேலி கோட்டச் சங்க காப்பீட்டுக் கழக ஊழியர்கள் மற்றும் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.