தென்காசி, ஜூலை 8 –
தென்காசி மாவட்ட காங்கிரஸ் கமிட்டியின் சார்பாக 2026 சட்டமன்றத் தேர்தல் ஆயத்தக் கூட்டம் மற்றும் கிராம கமிட்டி உறுப்பினர் அட்டை வழங்கும் விழா தமிழ்நாடு மாநில காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை, கிராம கமிட்டி சீரமைப்பு குழுத்தலைவர் பீட்டர் அல்போன்ஸ், திருநெல்வேலி நாடாளுமன்ற உறுப்பினர் ராபர்ட் புரூஸ், மாநில பொருளாளர் ரூபி மனோகரன் ஆகியோர் முன்னிலையில் தென்காசி மாவட்ட காங்கிரஸ் கட்சியின் தலைவரும் தென்காசி சட்டமன்ற உறுப்பினருமான பழனி நாடார் தலைமையில் சுரண்டை தனியார் மஹாலில் நடைபெற்றது.
கிராம கமிட்டி உறுப்பினர் அட்டை வழங்கும் விழாவில் தென்காசி மாவட்டம் மட்டுமின்றி மற்ற மாவட்டங்களில் இருந்தும் காங்கிரஸ் கட்சியை சார்ந்த முக்கிய நிர்வாகிகள் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார்கள். நிகழ்ச்சியில் தமிழ்நாடு மாநில காங்கிரஸ் தலைவர் செல்வபெருந்தகை பேசியதாவது: வருகின்ற 2026 சட்டமன்றத் தேர்தலில் இந்தியா கூட்டணி தலைமையில் மீண்டும் தமிழகத்தில் திமுக ஆட்சி அமையும். தென்காசி மாவட்டத்தில் ஐந்து தொகுதிகளையும் இந்தியா கூட்டணி கட்சிகள் கைப்பற்றும். தென்காசியில் மீண்டும் இந்தியா கூட்டணியின் சார்பாக காங்கிரஸ் கட்சி போட்டியிட்டு 25,000 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறும். இந்தியா கூட்டணியை கலைக்க நினைப்பவர்கள் இந்தியா கூட்டணியில் இருந்து ஒரு செங்கலை கூட எடுக்க முடியாது என்று பேசினார்.
நிகழ்ச்சியில் மாவட்ட காங்கிரஸ் பொருளாளர் முரளி ராஜா, அமைப்பு செயலாளர் ராம் மோகன், நாடாளுமன்ற பொறுப்பாளர் சிலுவை, சுரண்டை நகராட்சி சேர்மன் வள்ளி முருகன், தென்காசி நகர காங்கிரஸ் தலைவர் மாடசாமி ஜோதிடர், தென்காசி மாவட்ட காங்கிரஸ் பொதுச் செயலாளர் சந்தோஷ், தென்காசி மாவட்ட பஞ்சாயத்து துணைத்தலைவர் உதய கிருஷ்ணன், துணைத் தலைவர் சித்திக், நகர பொருளாளர் ஈஸ்வரன், நகர் மன்ற உறுப்பினர்கள் ரஃபீக், சுப்பிரமணியன், பூமா தேவி, வட்டாரத் தலைவர்கள் கதிரவன், பெருமாள், ஜெய்பாக்யா சட்டநாதன், சுரண்டை நகர காங்கிரஸ் தலைவர் ஜெயபால் மற்றும் தென்காசி மாவட்ட காங்கிரஸ் கட்சியை சார்ந்த முக்கிய நிர்வாகிகள் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.