திருவள்ளூர், ஜூலை 22 –
திருவள்ளூர் மாவட்டம், திருவேற்காடு ராஜரத்தினம் நகரில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ ஜெய சக்தி விநாயகர் ஆலய கும்பாபிஷேக விழா வெகு விமர்சியாக நடைபெற்றது. இந்த விழாவில் உமாபதி, ராஜேந்திரன், ஐயப்ப தாசன், மணி குருசாமி, திருக்கோயில் அர்ச்சகர் சேகர் குருக்கள், ஆஷா ஆசீர்வாதம், ஆறுமுகம், லைன் முருகன், தலைவர் பாரதிராஜா, செயலாளர் பாபு, பொருளாளர் மணிகண்டன், துணைத் தலைவர்கள் மணிவண்ணன், வேதாச்சலம், ரங்கநாதன், துளசிதாஸ், சீனிவாசன், கார்த்திகேயன், கோவில் சபதி மயிலாடுதுறை செல்வம் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
மங்களகரமான விஸ்வாவசு வருஷம் ஆனி மாதம் கிருஷ்ணபக்க்ஷ சங்கடஹர சதுர்த்தி திதியும் சத்தியம் நட்சத்திரம் சித்தயோகம் கூடிய சுபயோக சுவர்தினத்தில் அருள்மிகு ஸ்ரீ ஜெயசக்தி விநாயகர், நூதன ஸ்ரீ வள்ளி தேவசேனா சமேத சுப்பிரமணியசாமி, நூதன ஸ்ரீ ஐயப்பன் ஸ்ரீ லட்ஷ்மி ஹயக்கிரீவர், ஸ்ரீ தட்சிணாமூர்த்தி ஸ்ரீ மகாவிஷ்ணு, ஸ்ரீ துர்க்கை அம்மன், ஸ்ரீ நவக்கிரஹம், ஓஸ்ரீ மூஷிகம், ஓஸ்ரீ பலிபீடம் ஆகிய ஸ்வாமிகளுக்கு புனராவர்த்தன ஜீர்ணேத்தாரண அஷ்டபந்தன மஹா கும்பாபிஷேக விழா சீரும் சிறப்புமாக நடைபெற்றது. வருகை தந்த பக்தர்கள் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது. இதில் தலைவர் என். இ.கே. மூர்த்தி, கோலடி துரை மற்றும் சங்கர், சுதாகர் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.