திருவள்ளூர், ஜூலை 25 –
திருவள்ளூர் மாவட்டம் பூண்டி ஒன்றியம் மோவூர் ஊராட்சியில் நமது கிராமம் நமது வளர்ச்சி திட்டத்தின் கீழ் கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் சங்க அலுவலக கட்டிடத்தை மாவட்ட ஆட்சித் தலைவர் பிரதாப் ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார். பின்னர் பொது மக்களிடமிருந்து பெறப்படுகிற பாலின் தரத்தை கண்டறியும் வகையில் கூட்டுறவு அலுவலகத்தில் பொருத்தப்பட்டுள்ள இரண்டு லட்சம் மதிப்பிலான ‘இ மேட்’ எனப்படும் ‘எல்ட்க்ரானிக் மில்க் அடல்ட்ரேஷன் டெஸ்ட்’ கருவியை பயன்படுத்தி பாலில் உள்ள புரத சத்தை கண்டறிந்து அதற்கு ஏற்ப பால் உரிமையாளர்களுக்கு பணம் வழங்கப்படுவதை குறித்து அதிகாரிகளிடம் கேட்டு அறிந்தார். பின்னர் கால்நடை பராமரிப்பு முகாமை நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டனர்.
அதனைத் தொடர்ந்து நிகழ்ச்சியில் பேசிய மாவட்ட ஆட்சியர் தெரிவிக்கையில் பொதுமக்கள், தனியார் நிறுவனத்திற்கு பால் வழங்கப்படுவதால் அவர்கள் தரமற்ற பொருள்களை தயாரித்து விற்பனை செய்வதால் பொதுமக்கள் அதனால் பல்வேறு இன்னல்களுக்கு ஆளாகி வருவதாகவும், நம்முடைய பிள்ளைகளை சத்தான உணவு கொடுத்து வளர்ப்பது போல் ஒவ்வொரு கால்நடை உரிமையாளர்களும் சத்தான உணவுகளை கால்நடைக்கு கொடுத்து வளர்த்தால் மட்டுமே நல்ல ஒரு ஊட்ட சத்தான பாலை நாம் பெற முடியும் எனவும், அதற்காக தமிழக அரசின் சார்பில் மோவூர் கிராமத்தில் உள்ள 125 கால்நடை உரிமையாளர்களுக்கு 21 லட்சம் மதிப்பீட்டில் மாட்டுத் தீவனங்களை வழங்கப்பட உள்ளதாக அவர் தெரிவித்தார்.
என் கட்சி முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் டில்லி பாபு, கூட்டுறவு சங்க செயலாளர் உதயா, முன்னாள் ஊராட்சி மன்றம் துணைத் தலைவர் அன்பழகன் மற்றும் கூட்டுறவு சங்க இயக்குனர்கள் பாலகிருஷ்ணன், சேகர், தீபா, கார்த்திக், கருணாமூர்த்தி, ஹரி லோகநாயகி, நவீன், குமார், ஏழுமலை, சேகர் உட்பட பலர் கலந்து கொண்டனர்.