தருமபுரி, ஜூலை 31 –
தருமபுரி பி.எஸ்.என்.எல் அலுவலகம் அருகில் மாவட்ட விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் திருச்சியில் நடந்த மத சார்பின்மை காப்போம், பெருந்திரள் பேரணி தீர்மான விளக்கப் பொதுக்கூட்டம் மைய மாவட்டச் செயலாளர் பாண்டியன் தலைமையில் நடைபெற்றது. கிழக்கு மாவட்ட செயலாளர் சாக்கன் சர்மா வரவேற்றார். மேற்கு மாவட்ட செயலாளர் கருப்பண்ணன் முன்னிலை வகித்தார். கூட்டத்தில் மாநில அமைப்புச் செயலாளர் சந்திரகுமார் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.
இந்த கூட்டத்தில் முன்னாள் மாவட்ட செயலாளர்கள் ஜானகி ராமன், ஜெயந்தி ராமன், மண்டல துணைச் செயலாளர் சக்தி, கூட்டணி கட்சி நிர்வாகிகள் ஊமை ஜெயராமன், காங்கிரஸ் முன்னாள் எம்பி தீர்த்த ராமன், சி.பி.எம் சிசுபாலன், சிபிஐ கலைச்செல்வன், மதிமுக சிட்டு, மநேம கட்சி சிராஜ் தின், தவாக, மநீம மற்றும் பலர் கலந்து கொண்டனர். கிழக்கு ஒன்றிய செயலாளர் குமரன் நன்றி கூறினார்.