தருமபுரி, செப்டம்பர் 9 –
தருமபுரி நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் 17, 18, 23, 24வார்டு உள்ளிட்ட பகுதிகளுக்கான உங்களுடன் ஸ்டாலின் திட்டம் முகாம் தருமபுரி ஐ எம் எல் திருமண மண்டபத்தில் நகர மன்ற தலைவர் லட்சுமி நாட்டான் மாது முகாமினை துவக்கி வைத்தார். இதில் நகராட்சி ஆணையர் சேகர், நகர செயலாளர் நாட்டான் மாது, துப்புரவு அலுவலர் ராஜரத்தினம், வருவாய் ஆய்வாளர் மாதையன், நகர மன்ற உறுப்பினர்கள் செமையா ராஜா, பாலசுப்பிரமணியன் ஆகியோர் கலந்து கொண்டனர். இந்த முகாமில் அனைத்து துறையை சேர்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டு பொது மக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்களை பெற்றனர்.
இதில் மகளிர் உரிமைத் தொகை, பட்டா மாறுதல், புதிய குடும்ப உறுப்பினர் அட்டை, ஆதார் திருத்தம், இலவச வீட்டுமனை, இலவச வீடு உள்ளிட்ட கோரிக்கைகள் வேண்டி 600 க்கும் மேற்பட்டோர் பொதுமக்கள் மனு அளித்தனர். முகாமில் பல்வேறு துறை அரசு அதிகாரிகள் மற்றும் பொதுமக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர். இதில் நகர மன்ற தலைவர் லட்சுமி நாட்டான் மாது 70 பயனாளிகளின் மனுக்களை ஆய்வு மேற்கொண்டு அவர்களுக்கு துறை சார்ந்த நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.



