தருமபுரி டவுனில் சாலை விநாயகர் கோவில் தெருவில் அமைந்துள்ள ஸ்ரீ துரோபதி அம்மன் ஆலயத்தில் பால்குடம் ஊர்வலம் சிறப்பாக நடைபெற்றது. இதில் ஏராளமான பெண்கள் கலந்து கொண்டு அம்மனுக்கு பால் அபிஷேகம் செய்தனர்.இதனை தொடர்ந்து சாமிக்கு சிறப்பு பூஜை செய்யப்பட்டது. பொதுமக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து அம்மனை தரிசனம் செய்தனர். இவ்விழாவிற்கான ஏற்பாட்டை விழா குழுவினர் மற்றும் ஊர் பொதுமக்கள் செய்திருந்தனர். அன்னதானம் நடைபெற்றது.



