தருமபுரி, ஆகஸ்ட் 9 –
தருமபுரி மாவட்ட உணவு பாதுகாப்பு துறை சார்பில் செறியூட்டப்பட்ட உணவு தொடர்பான விழிப்புணர்வுஉணவு தொடர்பான விழிப்புணர்வு வாகனத்தை மாவட்ட ஆட்சியர் சதீஸ் கொடி அசைத்து தொடங்கி வைத்து பொதுமக்களிடம் செறியூட்டப்பட்ட உணவு பற்றிய விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை வழங்கினார்.
இதைத்தொடர்ந்து நகரப் பேருந்து நிலையத்தில் வைக்கப்பட்டுள்ள தானியங்கி மஞ்சப்பை விற்பனை இயந்திரத்தை ஆய்வு செய்தார். இந்நிகழ்ச்சியில் தருமபுரி நகர மன்ற தலைவி லட்சுமி நாட்டான் மாது, உணவு பாதுகாப்பு துறை அலுவலர்கள், அங்கன்வாடி ஊழியர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.