மதுரை மாவட்டம் பராமரிப்பில் உள்ள கூட்டுக் குடிநீர் திட்டங்கள் மற்றும் செயலாக்கத்தில் உள்ள கூட்டுக் குடிநீர் திட்டங்கள் குறித்து தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய இணை மேலாண்மை இயக்குநர் ஆனந்த் மோகன் ஆய்வு. மதுரை மாவட்டத்தில் பராமரிப்பில் உள்ள கூட்டுக் குடிநீர் திட்டங்கள் மற்றும் செயலாக்கத்தில் உள்ள கூட்டுக் குடிநீர் திட்டங்களை தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய இணை மேலாண்மை இயக்குநர் ஆணந்த் மோகன் நேரில் ஆய்வு செய்தார். தற்போது நிலவும் கோடை வெயில் மற்றும் வெப்ப அலையை சமாளிக்கும் வகையில் நடப்பில் உள்ள கூட்டுக் குடிநீர் திட்டங்களை நன்கு பராமரித்தும், செயலாக்கத்தில் உள்ள திட்டங்களை விரைந்து முடித்தும், மதுரை மாவட்டத்தில் சீரான குடிநீர் விநியோகத்தை உறுதி செய்ய அதிகாரிகளுக்கு தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய இணை மேலாண்மை இயக்குநர் ஆனந்த் மோகன் உத்தரவிட்டார்.



