By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: தமிழக அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதி நியமனத்தை காங்கிரஸ் பெரிதுபடுத்தவில்லை: அமைச்சர் ராஜேஷ்குமார் பேட்டி
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > தமிழக அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதி நியமனத்தை காங்கிரஸ் பெரிதுபடுத்தவில்லை: அமைச்சர் ராஜேஷ்குமார் பேட்டி
அரசியல்கனஂனியாகுமரிதமிழ்நாடு

தமிழக அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதி நியமனத்தை காங்கிரஸ் பெரிதுபடுத்தவில்லை: அமைச்சர் ராஜேஷ்குமார் பேட்டி

Last updated: June 29, 2026 2:26 pm
June 29, 2026
7 Views
Share
SHARE


நாகர்கோவில், ஜூன் 29 –

தமிழ்நாடு சுற்றுலாத்துறை அமைச்சர் ராஜேஷ்குமார் நேற்று நாகர்கோவில் நிருபர்களிடம் பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது: கன்னியாகுமரி மாவட்டத்தில் கேன்சர் பாதிப்பு அதிகமாக உள்ளது. ஏற்கனவே இங்கு கேன்சர் ஆராய்ச்சி மையம் தொடங்க வேண்டும் என பல ஆண்டுகளாக கோரிக்கை இருந்து வருகிறது. தற்போது காங்கிரஸ் பங்கேற்கும் கூட்டணி அரசு தமிழகத்தில் அமைந்துள்ளது. இந்த கோரிக்கையை அரசின் கவனத்திற்கு கொண்டு சென்று நடவடிக்கை எடுக்கப்படும்.

குமரி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் கேன்சருக்கான சிகிச்சை மையம் கட்டப்பட்டு, பணிகள் அனைத்தும் ஏற்கனவே முடிவடைந்துள்ளன. ஒன்றிய அரசின் கதிர் இயக்கத்துறை லைசென்ஸ் பெற வேண்டும். இதற்கான பணிகள் நடந்து வருகின்றன. தமிழ்நாடு முதலமைச்சர் மற்றும் சுகாதாரத் துறை அமைச்சர் ஆகியோரின் கவனத்திற்கு இந்த பிரச்சனையை கொண்டு சென்று, விரைவில் கேன்சருக்கான ரேடியோ தெரபி சிகிச்சை மையத்தை திறக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

கேன்சர் பாதிக்கப்பட்ட நோயாளிகள் சிகிச்சை மற்றும் கேன்சர் தொடர்பான விழிப்புணர்வு ஆகியவற்றிற்கு முக்கியத்துவம் கொடுத்து நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. குமரி மாவட்டத்தில் மக்கள் நல்வாழ்வு துறையுடன் இணைந்து கேன்சர் தடுப்புக்கான நடவடிக்கை எடுக்கப்படும்.

தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் மாணிக்கம் தாகூருக்கு வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். அவர் காங்கிரஸ் கட்சியில் அகில இந்திய பொறுப்புகள் உட்பட பல்வேறு பொறுப்புகளில் இருந்தவர். கட்சியை பலப்படுத்தும் வகையில் அவர் தமிழ்நாடு முழுவதும் சுற்றுப்பயணம் செய்து, வட்டாரத் தலைவர்கள் முதல் தொண்டர்கள் வரை சந்தித்து கட்சியை பலப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை அவர் மேற்கொள்வார்.

தமிழ்நாடு அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதி நியமனத்தில் எந்த நிலைப்பாட்டையும் நாங்கள் எடுக்கவில்லை. புதிய அரசு பொறுப்பேற்று இருக்கிறது. இந்த அரசு பொறுப்பேற்று குறைந்த நாட்கள்தான் ஆகிறது. மக்கள் நல பணிகளில் இந்த அரசின் செயல்பாடுகளை நாங்கள் உற்று நோக்கி வருகிறோம். எதற்கெடுத்தாலும் குறை சொல்ல நாங்கள் விரும்பவில்லை. மக்கள் நல திட்டங்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து இந்த அரசு செயல்பட வேண்டும். தொலைநோக்கு பார்வையுடன் தான் எதையும் பார்க்க வேண்டும்.

டெல்லி பிரதிநிதி நியமனம் சரியா? தவறா? என்பதை ஆராய்ந்து பார்க்க கூடாது. இதை ஆதரிப்பதாகவும் எடுத்துக் கொள்ள வேண்டாம். இதை நாங்கள் பெரிதுபடுத்த விரும்பவில்லை. இவ்வாறு அமைச்சர் ராஜேஷ்குமார் கூறினார். இந்த பேட்டியின் போது மாவட்ட காங்கிரஸ் நிர்வாகிகள் உட்பட பலர் உடன் இருந்தனர்.

விளம்பரம்

You Might Also Like

பி.டி செல்வகுமார் கோரிக்கை மனு
காப்புக்காட்டில் நூல் வெளியீட்டு விழா குமரி முத்தமிழ் மன்றம் சார்பில் நடந்தது
ஆர்.எம்.எஸ்-ல் ஆதார் சேவை மையம் தொடக்கம்
தக்கலை அருகே கஞ்சா வைத்திருந்த 3 வாலிபர்கள் கைது
காட்டாத்துறை பகுதியில் கண்டெய்னர் லாரியில் 6 ஆயிரம் கிலோ ரேஷன் அரிசி பறிமுதல்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
திருப்பூர்மாவட்டம்

101 வது பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம்!!

February 9, 2025
130 Views
பழுதடைந்த சாலையை சரி செய்து தார் சாலை அமைத்து தரவேண்டும்: தோவாளை வட்டார காங்கிரஸ் தலைவர் கோரிக்கை மனு
சாலையை கடக்க முயன்ற ஆட்டோ விபத்து
தஞ்சாவூரில் ஏடகம் ஞாயிறு முற்றம்
கேரள சமாஜம் 43 ஆம் ஆண்டு ஓணம்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account