தஞ்சாவூர், ஜூலை 26 –
தஞ்சாவூர் மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகக் கூட்டரங்கில் 10 மற்றும் 12ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றுள்ள கற்றல் திறன் குறைபாடுடைய மாற்றுத் திறனாளி மாணவ மாணவியர்கள் உயர்கல்வி மற்றும் தொழிற் கல்வியில் சேர்வதற்கான சிறப்பு முகாம் மாவட்ட ஆட்சித்தலைவர் பா. பிரியங்கா பங்கஜம் தலைமையில் நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட கலெக்டர் பிரியங்கா பங்கஜம் தெரிவித்ததாவது:
தஞ்சாவூர் மாவட்டம் 10, 12-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றுள்ள கற்றல் திறன் குறைபாடுடைய மாற்றுத் திறனாளி மாணவ மாணவியர்கள் உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வியில் சேர்வதற்கான சிறப்பு முகாம் நடைபெற்றது.
2024-2025 ஆம் கல்வியாண்டில் 12-ம் வகுப்பில் தேர்ச்சி பெற்றுள்ள கற்றல் திறன் குறைபாடுடைய மற்றும் மனநலம் சார்ந்த பிரச்சனைகளால் குறிப்பிட்ட பாடங்களில் விலக்களிக்கப்பட்ட மாற்றுத்திறனாளி மாணாக்கர்கள் உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி பாடங்களாகிய பிட்டர், டர்னர், மெசினிஸ்ட், எலக்ட்ரீசியன், மெக்கானிக் டிராக்டர், இண்டீரியர் டிசைன் அண்டு டெக்கரேசன், கேட்டரிங் மற்றும் உணவு சார்ந்த படிப்பு, மெக்கானிக் எலக்டிரிக் வெகிக்கிள், இண்டஸ்டிரியல் ரோபாடிக்ஸ் அண்டு டிஜிட்டல் மார்க்கட்டிங், அட்வான்ஸ்டுசி. என். சிமெசினிங் அண்டு டெக்னீசியன் ஆகிய பாடப்பிரிவுகளில் சேருவதற்கான சிறப்பு முகாம் நடைபெற்றது.
அதில் கற்றல் திறன் குறைபாடுடைய மற்றும் மனநலம் சார்ந்த பிரச்சனைகளால் குறிப்பிட்ட பாடங்களில் விலக்களிக்கப்பட்ட மாற்றுத்திறனாளி மாணாக்கர்கள் கலந்து கொண்டு பயன்பெற்றனர். மேலும், இம்முகாமில் மாற்றுத்திறனாளி மாணவனுக்கு தொழிற்கல்வி பயில்வதற்கான சேர்க்கை மாவட்ட கலெக்டர் தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் தெ. தியாகராஜன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.