தஞ்சாவூர், செப்டம்பர் 17 –
தஞ்சாவூர் மாவட்டத்தில் 1,699 மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு ரூபாய் 125.16 கோடி கடன் உதவி வழங்கப்பட்டது என்றார் உயர் கல்வித் துறை அமைச்சர் கோவி. செழியன்.
சேலத்தில் தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனம் சார்பில் மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு வங்கி நேரடி கடன் உதவி மற்றும் சுய உதவிக் குழு உறுப்பினர்களு க்கு அடையாள அட்டை வழங்கு வதை தமிழக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தார். இவ்விழா அனைத்து மாவட்டங்களிலும் நேரடி ஒளிபரப்பு செய்யப்பட்டது.
இதன்படி தஞ்சாவூர் பாரத் அறிவியல் மற்றும் நிர்வாகவியல் கல்லூரியில் ஒளிபரப்பப்பட்டு பின்னர் 1,144 மகளிர் சுய உதவி குழுக்களைச் சேர்ந்த 13 ஆயிரத்து 728 உறுப்பினர்களுக்கு ரூபாய் 119.48 கோடியிலான வங்கி நேரடி கடன் நிதி உதவியும், 165 மகளிர் சுய உதவிகுழுவினருக்கு சமுதாய முதலீட்டு நிதி ரூபாய் 1.79 கோடி நிதியும், 317 தொழில் செய்யும் மகளிர் சுய உதவி குழுவின்ருக்கு ரூபாய் 3.33 கோடி தொழில் கடனும் என மொத்தம் 1,699மகளிர் சுய உதவிக் குழுக்களைச் சேர்ந்த 16,336 உறுப்பினர்களுக்கு ரூபாய் 125.16 கோடியில் நலத்திட்ட உதவிகள் யும், அடையாள அட்டைகளை அமைச்ச கோவி.செழியன் வழங்கினார்.
விழாவிற்கு மாவட்ட கலெக்டர் பிரியங்கா பங்கஜம் தலைமை வகித்தார். மக்களவை உறுப்பினர் முரசொலி, சட்டப்பேரவை உறுப்பினர்கள் துரை. சந்திர சேகரன், டி கே ஜி நீலமேகம், மேயர்கள் சண். ராமநாதன் (தஞ்சாவூர்), சரவணன் (கும்பகோணம்), தஞ்சாவூர் துணை மேயர் டாக்டர் அஞ்சுகம் பூபதி, தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்க திட்ட இயக்குனர் அருண்மொழி, தஞ்சாவூர் கோட்டாட்சியர் நித்யா உதவி திட்ட அலுவலர் ஜெகதீஸ்வரி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.



