தஞ்சாவூர், ஜூலை 22 –
தஞ்சாவூர் மாவட்டத்தில் ஊராட்சி ஒன்றிய தொடக்க, நடுநிலை, உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகள் மற்றும் அரசு, அரசு உதவி பெறும் மற்றும் தனியார் பள்ளிகளை மொத்தம் 2,062 உள்ளன. இப்பள்ளிகளில் உள்ள வகுப்பறை கட்டிடங்களில் உறுதித் தன்மை, மாணவர்களின் சுகாதாரம், பாதுகாப்பு இடிக்கப்பட வேண்டிய கட்டிடங்கள் ஆகியவற்றை ஆய்வு செய்ய கலெக்டர் ரேவதி உத்தரவிட்டுள்ளார்.
அதன்படி மாணவர்கள் பள்ளி வளாகத்தில் பாதுகாப்பாக இருப்பதை உறுதி செய்யவும், அவர்களின் பாதுகாப்பிற்கு ஏதேனும் குந்தகம் ஏற்படும் அம்சங்கள் பள்ளியில் உள்ளனவா என்பதே பார்த்து அதை சரி செய்யவும் பொதுப்பணித்துறை, சுகாதாரத்துறை, தீயணைப்பு துறை, வருவாய் துறை மற்றும் ஊரக வளர்ச்சி துறை அலுவலர்களால் ஆய்வு தொடங்கப்பட்டுள்ளது.
இந்த ஆய்விற்காக 14 ஒன்றியங்களிலும், ஆய்வுக்குழு மேற்குறிப்பிட்டுள்ள துறை அலுவலர்களைக் கொண்டு அமைக்கப்பட்டுள்ளது. இந்த ஆய்வினை வருகிற 31ஆம் தேதிக்குள் முடிக்கவும் கலெக்டர் அறிவுறுத்தி உள்ளார்.



