தஞ்சாவூர், ஆகஸ்ட் 3 –
தஞ்சாவூர் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் கலெக்டர் ரேவதி தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் இலவச வீட்டு மனை பட்டா, முதியோர் உதவித் தொகை, குடும்ப அட்டை, பட்டா மாற்றம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய 410 மனுக்களை பொது மக்கள் கலெக்டரிடம் வழங்கினார்கள். இந்த மனுக்கள் மீது உரிய நடவடிக்கைகள் உடனடியாக மேற்கொள்ளுமாறு சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு கலெக்டர் உத்தரவிட்டார்.
அதனைத் தொடர்ந்து மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் தஞ்சாவூர் தெற்கு தெரு பகுதியினை சேர்ந்த விஜயன் திருஞானம் என்பவர் துபாயில் பணிபுரிந்து இருந்து எடுத்து அவருக்கு சேர வேண்டிய சட்டப்படியான நிலுவைத் தொகை ரூபாய் 4,04,886 க்கான காசோலையினை அவரது மனைவி குமாரி அவர்களிடம் மாவட்ட கலெக்டர் ரேவதி வழங்கினார். இந்தக் கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் இளங்கோவன், அனைத்து துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.



