By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: தஞ்சாவூரில் பொதுமக்கள், அரசியல் கட்சியினர் சாலை, அரசு சுவர்களில் அனுமதியின்றி விளம்பர பேனர்கள், சுவரொட்டிகள் ஒட்ட தடை விதித்து மாநகராட்சி எச்சரிக்கை
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > தஞ்சாவூர் > தஞ்சாவூரில் பொதுமக்கள், அரசியல் கட்சியினர் சாலை, அரசு சுவர்களில் அனுமதியின்றி விளம்பர பேனர்கள், சுவரொட்டிகள் ஒட்ட தடை விதித்து மாநகராட்சி எச்சரிக்கை
தஞ்சாவூர்தமிழ்நாடு

தஞ்சாவூரில் பொதுமக்கள், அரசியல் கட்சியினர் சாலை, அரசு சுவர்களில் அனுமதியின்றி விளம்பர பேனர்கள், சுவரொட்டிகள் ஒட்ட தடை விதித்து மாநகராட்சி எச்சரிக்கை

Last updated: July 15, 2026 7:12 pm
July 15, 2026
9 Views
Share
SHARE

தஞ்சாவூர், ஜூலை 15 –

தஞ்சாவூரில் பொதுமக்கள் அரசியல் கட்சியினர் சாலை அரசு சுவர்களில் அனுமதி இன்றி விளம்பர பேனர்கள் சுவரொட்டிகள் ஒட்ட தடை விதித்து மாநகராட்சி எச்சரிக்கையாக அறிவித்துள்ளது.

தஞ்சாவூர் மாநகராட்சி ஆணையர் தீபனா விஸ்வேஸ்வரி விடுத்துள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது: தஞ்சாவூர் மாநகராட்சி எல்லைக்குட்பட்ட பகுதிகளில் பொதுமக்கள், அரசியல் கட்சிகள், அமைப்புகள் மற்றும் தனி நபர்கள் அனுமதியின்றி விளம்பரங்கள் செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக சாலை ஓரங்கள், சந்திப்புகள், அரசு கட்டிடங்கள், பஸ் நிறுத்தங்கள், தடுப்பு சுவர்கள், தனியார் நிலங்கள், மரங்கள் உள்ளிட்ட இடங்களில் விளம்பர பதாகைகள், பிளக்ஸ் பேனர்கள், டிஜிட்டல் பேனர்கள், சுவரொட்டிகள், விளம்பர அட்டைகள், எல்இடி விளம்பர பலகைகள் உள்ளிட்ட விளம்பரங்களை வைப்பது தடை செய்யப்பட்டுள்ளது.

தமிழ்நாடு நகர் புற உள்ளாட்சி அமைப்புகள் சட்ட திட்டங்களின்படி மாநகராட்சியின் முன் அனுமதி பெற்ற பின்னரே இத்தகைய விளம்பரங்களை அமைக்க வேண்டும். அனுமதி பெறாமல் விளம்பர பலகைகள், பதாகைகள், டிஜிட்டல் பேனர்கள், பிளக்ஸ், சுவரொட்டிகள் உள்ளிட்டவற்றை வைப்பது சட்டவிரோதமான செயலாகும். மேலும் விதிமுறைகளை மீறி வைக்கப்படும் அனைத்து அனுமதியற்ற விளம்பரங்களும் மாநகராட்சி மூலமாக அகற்றப்படும் என்றும், அதற்கான செலவினமும், சம்பந்தப்பட்டவர்களிடம் இருந்து வசூலிக்கப்படும். இது போன்ற விதிமுறைகளில் ஈடுபடுவோர் மீது மாநகராட்சி சட்டப்பிரிவின் கீழ் முதல் முறையாக குற்றம் நிரூபிக்கப்பட்டால் ரூபாய் 5000 முதல் 25,000 வரை அபராதம் விதிக்கப்படும். தொடர்ந்து விதிமீறலில் ஈடுபட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

எனவே பொதுமக்கள் அரசியல் கட்சிகள் மற்றும் அனைத்து அமைப்பினரும் மாநகராட்சி விதிமுறைகளை முறையாகப் பின்பற்றி முன் அனுமதி பெற்ற பின்னரே விளம்பர பேனர்களை அமைக்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

விளம்பரம்

You Might Also Like

மருந்துவாழ் மலையில் மகாதீபம் ஏற்ற 61 எண்ணெய் குட ஊர்வலம்; எம்எல்ஏக்கள் தளவாய்சுந்தரம், எம்.ஆர்.காந்தி தொடங்கி வைத்தனர்
அண்ணாமலை விரைவில் கட்சி கொடி, சின்னம் அறிவிப்பார்; உள்ளாட்சி தேர்தல் நடந்தால் கண்டிப்பாக போட்டியிடுவோம்: we The leaders இயக்க நிர்வாகிகள் மதுரையில் பேட்டி
திருச்சி ஜிஹெசில் பயிற்சி மருத்துவர்கள் அநாகரீகம்
பெண்களின் புகைப்படங்களை போலி சமூக வலைதளத்தில் காட்டி பணம் பறித்து மோசடியில் ஈடுபட்ட பெண்: சைபர் கிரைம் போலீசாரால் கைது
1378 பள்ளிகளில் விலையில்லா பாடப் புத்தகங்கள் வழங்கப்பட்டது
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
ஈரோடு

ஈரோடு பெரிய மாரியம்மன் கோவில் அறங்காவலர்கள் நியமனம்

August 6, 2025
63 Views
ஐந்தாயிரம் மரக்கன்றுகள் வழங்கும் விழா
விளாத்திகுளத்தில் விஸ்வகர்மா ஜெயந்தி விழாவை முன்னிட்டு மாபெரும் மாட்டு வண்டி போட்டி
மரண குழிகளாக காட்சியளிக்கும் தடிக்காரன்கோணம்
ஆபத்தான நிலையில் உள்ள கட்டிடத்தில் இயங்கும் தொடக்கப்பள்ளி
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account