நாகர்கோவில், செப்டம்பர் 9 –
குமரி மாவட்டத்தில் உள்ள மக்களுக்கு ரேஷன் கடை மூலம் அத்தியாவசிய பொருட்கள் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. குமரி மாவட்டத்திற்கு தெலுங்கானா, ஆந்திரா, தஞ்சை, திருவாரூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து ரேஷன் அரிசி ரயில் மூலம் கொண்டுவரப்பட்டு நுகர் பொருள் வாணிப கழக கிட்டங்கிகளுக்கு அனுப்பி வைக்கப்படும். நேற்று காலை ரயில் மூலம் தஞ்சாவூரில் இருந்து நாகர்கோவிலுக்கு 1250 டன் அரிசி வந்தது.
அரிசி மூடைகளை லாரிகளில் ஏற்றி கோணத்தில் உள்ள நுகர்பொருள் வாணிப கழக கிட்டங்கிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. கொண்டு செல்லப்பட்ட அரிசி மூடைகள் ரேஷன் கடைகளின் ஒதுக்கீட்டின்படி அனுப்பி வைக்கப்பட உள்ளது.


