திண்டுக்கல், ஜூன் 20 –
11 – வது சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு திண்டுக்கல் ஜி.டி.என். இயற்கை மற்றும் யோகா ஆராய்ச்சி மருத்துவக்கல்வி மற்றும் மத்திய யோகா மற்றும் இயற்கை மருத்துவம் ஆராய்ச்சி கவுன்சில் [CCRYN], புது டெல்லி [Ministry of AYUSH] இணைந்து நடத்திய யோகா சம்வேஸ் நிகழ்வில் ஒருநாள் இலவச நீரிழிவு மருத்துவ விழிப்புணர்வு முகாம் நிகழ்ச்சி நடைபெற்றது. இவ்விழாவை ஜி.டி.என். கல்விக் குழுமம் தலைவர் Ln.Dr. K.ரெத்தினம், இயக்குநர் Dr. துரை ரெத்தினம் மற்றும் மாவட்ட சித்த மருத்துவ அலுவலர் Dr. P. சிவக்குமார் ஆகியோர் தலைமை வகித்து சிறப்பித்தனர். இவ்விழாவில் நீரிழிவு நோய் பற்றிய விழிப்புணர்வு மற்றும் அறிவுரை நோயாளிகளுக்கு வழங்கப்பட்டது. இத்துடன் நோயாளிகளுக்கு இலவச மருத்துவ பரிசோதனைகளும், யோகா பயிற்சிகள் அளிக்கப்பட்டது. இம்முகாமில் நீரிழிவு நோய் குறித்து விவரங்கள் உணவு பழக்க வழக்கங்கள், பயிற்சிகள் மற்றும் தடுப்பு முறைகளைக் குறித்து Dr. தீபா, Dr. கீர்த்தனா, Dr. வேதஹர்சினி, Dr. ரென்ஜீஸ், Dr. சௌந்தரபாண்டியன் ஆகியோர் கலந்து கொண்டு விளக்கம் அளித்தனர். இம்முகாமில் சுமார் 300 க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு பயன்பெற்றனர்.