சுசீந்திரம், ஜுலை 16 –
சுசீந்திரம் தாணுமாலய சுவாமி கோவிலில் வருடம் தோறும் நல்ல மழை வேண்டியும் விவசாயம் செழிக்க வேண்டி பாரம்பரியமாகவே ஆடி மாதம் தாணுமாலய சுவாமிக்கும் திருவேங்கட விண்ணவப் பெருமாளுக்கும் களப பூஜை நடைபெறுவது வழக்கம். அது போல இந்த ஆண்டு களப பூஜை நாளை மறுநாள் துவங்குகிறது அதனை முன்னிட்டு 13 நாட்கள் களப பூஜை நடைபெறுகின்றது. இதை ஒட்டி தினமும் காலை 10 மணிக்கு கோவிலில் நடைபெறும் உச்ச கால அபிஷேகம் 10:30 மணிக்கு தங்க குடத்தில் சந்தனம், ஜவ்வாது, பன்னீர், கோரசனை, குங்குமப்பூ கலந்த களபத்தால் திருவேங்கட விண்ணவப் பெருமாள் தாணுமாலயசுவாமி ஆகியோர்களுக்கு மேளதாளங்கள் முழங்க களப அபிஷேகம் நடைபெறுகிறது. இந்த களப அபிஷேகத்தை மாத்தூர் மடம் தந்திரி சஜித் சங்கரா நாராயண ரூ நடத்துகிறார். நிறைவு நாளான 30-ம் தேதி அடிவாச ஹோமம் என்ற கணபதி ஹோமம் நீலகண்ட சாமி சன்னதி அருகே நடைபெற உள்ளது. இதற்கான ஏற்பாடுகளை கோயில் நிர்வாகத்தினர், தாணுமாலய சுவாமி பக்தர்கள் இணைந்து செய்து வருகின்றனர்.