சிவகங்கை, ஜூலை 19 –
சிவகங்கை அரண்மனை வாசலில் தமிழ்நாடு தொடக்கக் கல்வி ஆசிரியர் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கை குழு ( டிட்டோஜாக் ) சார்பில் மறியல் போராட்டம் நடைபெற்றது. இந்தப் போராட்டத்தின் போது அவர்களின் நீண்ட நாள் கோரிக்கையான பழைய ஓய்வூதியத் திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும். இடைநிலை ஆசிரியர்களின் ஊதிய முரண்பாடுகளை சரி செய்ய வேண்டும். அரசாணை 243 ஐ உடனே ரத்து செய்ய வேண்டும் என்ற கோரிக்கைகள் உள்பட 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி இந்தப் போராட்டம் நடைபெற்றது .
போராட்டத்தில் ஆசிரியர்கள் மற்றும் தொழிற்சங்க நிர்வாகிகள் பங்கேற்றனர். இந்த போராட்டத்தின் போது ஆசிரியர்கள் மறியல் போராட்டம் நடத்தியதால் அவர்கள் அனைவரும் கைது செய்யப்பட்டு தனியார் மஹாலில் வைக்கப்பட்டனர் .