By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
  • TN 2026 poll
Reading: கச்சத்தீவை மீட்க தனி தீர்மானம் திமுக கபட நாடகம்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
  • TN 2026 poll
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > கச்சத்தீவை மீட்க தனி தீர்மானம் திமுக கபட நாடகம்
கனஂனியாகுமரி

கச்சத்தீவை மீட்க தனி தீர்மானம் திமுக கபட நாடகம்

Last updated: April 7, 2025 9:59 am
April 7, 2025
30 Views
Share
SHARE

நாகர்கோவில் ஏப் 6

கச்சத்தீவை மீட்க சட்டப்பேரவையில் தனி தீர்மானம் எனும் திமுகவின் கபட நாடகத்தை அம்பலப்படுத்துவோம்.என நாம் தமிழர் கட்சி மரிய ஜெனிபர் கூறி வெளியிட்டுள்ள அறிக்கை:-
பொதுவாகவே தமிழ்நாட்டில் வாக்கு அரசியல் சூழலில் சில பிரச்சனைகளை எப்போதும் தீர்க்காமல் உயிர்ப்போடே வைத்துக் கொண்டிருப்பது இரண்டு திராவிட கட்சிகளின் வியூகமாக இருந்து வருகிறது.
அதில் முக்கியமான ஒன்று கச்சத்தீவு மீட்பு.
தமிழ்நாட்டில் திமுகவும், ஒன்றியத்தில் காங்கிரஸ் கட்சியும் ஆட்சியில் இருந்தபோது தமிழர்களின் எவ்வித ஒப்புதலும் பெறாமல் தமிழ்நாட்டின் இறையாண்மைக்கு எதிராக கச்சத்தீவு எனும் நம் நிலம் இலங்கைக்கு தாரை வார்த்து கொடுக்கப்பட்டது.
அன்றைய சூழலில் தமிழ்நாட்டின் முதல்வராக இருந்த திரு கருணாநிதி அவர்கள் திருமதி இந்திரா காந்தி தலைமையிலான ஒன்றிய அரசுக்கு, நிபந்தனையற்ற விசுவாசியாக இருந்த காரணத்தால் எவ்வித வலிமையான எதிர்வினைகளும் தமிழ்நாடு அரசு சார்பில் முன்னெடுக்கப்படவில்லை.
அதுமட்டுமின்றி தமிழ்நாட்டில் இருந்த இடதுசாரிகள் உள்ளிட்ட மற்ற கட்சிகளும் கச்சத்தீவு தாரை வார்ப்பிற்கு ஆதரவாகவும் எதிர்ப்பில்லாத நிலைப்பாட்டுடன் தான் இருந்தனர். இன்று வரையிலும் தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி, கட்சத் தீவு இலங்கைக்கு கொடுக்கப்பட்டது சரியான செயல்தான் என்ற நிலைப்பாட்டுடன் தான் இருந்து வருகிறது.
இந்த வரலாறு தமிழ்நாட்டில் இத்தனை நாள் அரசியல் செய்து கொண்டிருக்கும் பல கட்சிகளின் தமிழர் விரோத நிலைப்பாட்டை தெளிவாக வெளிப்படுத்துகிறது.

ஒவ்வொரு முறை தமிழ்நாட்டு மீனவர்கள் இலங்கை கடல் எல்லையில் கொல்லப்படும் போதும், தாக்கப்படும் போதும், கைது செய்யப்படும் போதும், விரட்டி அடிக்கப்படும் போதும் கச்சத்தீவை மீட்பது தான் ஒரே நிரந்தர தீர்வு என தொடர்ந்து நாம் வலியுறுத்தி வந்திருக்கிறோம். ஆனால் அப்போதெல்லாம் கண்டுகொள்ளாத இந்த ஆட்சியாளர்கள் தங்கள் அரசியல் தேவைகளுக்காகவும், தேர்தல் நேர விளம்பரத்திற்காகவும் மட்டும் கச்சத்தீவு பிரச்சினையை கையில் எடுப்பது மிகவும் மோசமான அரசியலாகும்.

இந்த மோசமான அரசியலை கடந்த காலங்களில் அதிமுகவும் கடந்த மக்களவைத் தேர்தலில் பாஜகவும் செய்திருக்கின்றனர். அவ்வகையில் வரும் 2026 தேர்தலை முன்னிட்டு திமுக மீண்டும் கச்சத்தீவு அரசியலை கையில் எடுத்திருக்கிறது.

உண்மையிலேயே கச்சத்தீவை மீட்பது திமுகவின் நோக்கமாக இருந்திருந்தால் கடந்த காலங்களில் சுமார் 16 வருடங்கள் ஒன்றியத்தில் காங்கிரஸ் உடனும், பல ஆண்டுகள் பாஜக, ஜனதாதளம் உள்ளிட்ட கட்சிகளுடனும் கூட்டணி ஆட்சியில் இருந்தபோது ஏன் கச்சத்தீவு மீட்பு பற்றி எவ்விதமான கோரிக்கையும் வைக்கவில்லை?

காங்கிரஸ் உடனான கூட்டணி ஆட்சியில் மிகவும் வலிமையாகவும், பல்வேறு முக்கியமான துறைகளில் அமைச்சரவை பொறுப்புகளையும் பெற்று ஒன்றிய ஆட்சி அதிகாரத்தில் பங்கு பெற்றிருந்தபோது திமுக கட்சத்தீவு மீட்புக்காக செய்த முன்நகர்வுகள் என்ன?

திமுகவுடன் கூட்டணியில் இருக்கும் காங்கிரஸ் கட்சிக்கு கச்சத்தீவு மீட்பு விவகாரத்தில் அதிகாரப்பூர்வ நிலைப்பாடு என்ன?

கச்சத்தீவு தாரை வார்க்கப்பட்ட போது அதை ஆதரித்து தீர்மானம் நிறைவேற்றிய கம்யூனிஸ்ட் கட்சியின் இன்றைய நிலைப்பாடு என்ன?

திமுக சார்பில் சட்டப்பேரவையில் இயற்றப்பட்ட இந்த தீர்மானத்தை தமிழ்நாடு பாஜக சார்பில் ஆதரித்திருக்கிறார் சட்டமன்ற உறுப்பினர் திருமதி வானதி சீனிவாசன். ஒன்றியத்தில் ஆட்சி அதிகாரத்தில் இருக்கும் பாஜக, கச்சத்தீவை மீட்க ஏதேனும் முயற்சிகளையோ பேச்சுவார்த்தைகளையோ நடத்தி இருக்கிறதா?

இந்த கேள்விகளை இந்த தருணத்தில் எழுப்ப வேண்டியிருக்கிறது.


கச்சத்தீவு மீட்பு என்பது உங்கள் அரசியல் விளையாட்டு அல்ல. அது தமிழர்களின் உரிமை. தமிழ்நாட்டின் இறையாண்மை.

கச்சத்தீவை தாரை வார்த்த இந்திரா காந்தி -சிறிமாவோ பண்டாரநாயகே முன்னிலையில் கையெழுத்தான இந்திய – இலங்கை ஒப்பந்தத்தை ரத்து செய்ய வேண்டும் அதற்காக ஒன்றிய அரசின் வெளியுறவுத்துறை சார்பாக இலங்கையுடன் சர்வதேச விதிகளின்படி பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு நமது நிலமும் கடல் எல்லையும் திரும்பப்பெறப்பட வேண்டும்.

இதற்கான அனைத்து அரசியல் அழுத்தங்களையும் தமிழ்நாடு அரசு தொடர்ந்து ஒன்றிய அரசுக்கு கொடுக்க வேண்டும். மாறாக தேர்தல் நேரங்களில் மட்டும் சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றிவிட்டு, மேடைகளில் பேசிவிட்டு, தேர்தல் வாக்குறுதியில் சேர்த்துவிட்டு, மறுபடியும் வழக்கம்போல அடுத்த ஐந்து ஆண்டுகள் கைகட்டி வாய்பொத்தி கண்மூடி இருப்பது அல்ல ஒரு அரசின் வேலை.

தமிழ்தேசிய அரசியலை தமிழ்நாடு அரசியல் தளத்தில் வலிமையாக முன்னெடுக்கும் நாம் தமிழர் கட்சி தொடர்ந்து கச்சத்தீவு மீட்பு பற்றி குரலெழுப்பி வருகிறோம். அது பற்றி மக்களுக்கு விழிப்புணர்வையும் ஏற்படுத்தி வருகிறோம்‌.
தேர்தல் வாக்குறுதியாக இல்லாமல் ஆட்சி வரைவறிக்கையிலேயே கச்சத்தீவு மீட்பை கனவாக கொண்ட கட்சி நாம் தமிழர் கட்சி. சில நாட்களுக்கு முன்பு கூட ராமேஸ்வரத்தில் அண்ணன் சீமான் தலைமையில் கச்சத்தீவு மீட்புக்கான மாபெரும் போராட்டமும் பொதுக் கூட்டமும் நடைபெற்றது.
நாங்கள் இதை தொடர்ந்து செய்வோம்.
ஆட்சி அதிகாரத்தில் இருப்பவர்கள் வெறும் தேர்தல் அரசியலாக பார்க்கும் கச்சத்தீவை, நாங்கள் எங்கள் உணர்வாகவும் உரிமையாகவும் பார்க்கிறோம்.
கச்சத்தீவு எங்களுக்கு அது அரசியல் அல்ல. அவசியம் என அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

விளம்பரம்

You Might Also Like

தக்கலை காவல் நிலையத்தில் காதல் ஜோடி பாதுகாப்பு கேட்டு தஞ்சம்
புதுக்கடை அருகே புளிக்கடையில் பயங்கர தீ விபத்து
பைங்குளத்தில் இந்து முன்னணி ஆர்ப்பாட்டம்: 26 பேர் மீது வழக்கு
நாகர்கோவிலில் தவெக சார்பில் ஆர்ப்பாட்டம்.
குமரியில் 4 தொகுதிகளுக்கு பாரதிய ஜனதா வேட்பாளர்கள் அறிவிப்பு
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
Blog

விளாத்திகுளம் அருகே பிள்ளையார் நத்தத்தில் பண்ணை குட்டை அமைத்தல் பணி

August 25, 2025
25 Views
முஞ்சிறை அரசு மாதிரி மேல்நிலை பள்ளியில் ரூ. 9 லட்சத்தில் அலங்கார கற்கள்; ராஜேஷ்குமார் எம்.எல்.ஏ திறந்து வைத்தார்
தருமபுரி திமுக மேற்கு இளைஞர் அணி கண்டன
76 வது குடியரசு தினவிழா
கிட்ட சூராம்பாளையம் கிராமத்தில் விடியல் பயணம் புதிய பேருந்துக்கு பொதுமக்கள் உற்சாக வரவேற்பு
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • TN 2026 pollNew
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account