By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: சிலைகள் மாயமான விவகாரத்தில் கோர்ட்டு உத்தரவு: தஞ்சாவூர் பெரிய கோவிலில் தொல்லியல் அறநிலைய துறை அதிகாரிகள் ஆய்வு
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > தஞ்சாவூர் > சிலைகள் மாயமான விவகாரத்தில் கோர்ட்டு உத்தரவு: தஞ்சாவூர் பெரிய கோவிலில் தொல்லியல் அறநிலைய துறை அதிகாரிகள் ஆய்வு
தஞ்சாவூர்தமிழ்நாடு

சிலைகள் மாயமான விவகாரத்தில் கோர்ட்டு உத்தரவு: தஞ்சாவூர் பெரிய கோவிலில் தொல்லியல் அறநிலைய துறை அதிகாரிகள் ஆய்வு

Last updated: July 24, 2026 7:55 pm
July 24, 2026
23 Views
Share
SHARE

தஞ்சாவூர், ஜூலை 24 –

தஞ்சாவூர் பெரிய கோவிலில் சிலைகள் மாயமான விவகாரத்தில் கோர்ட் உத்தரவின்பேரில் தொல்லியல் துறை, அறநிலையத் துறை அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.

தஞ்சாவூர் பெரிய கோவில் மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ள தொல்லியல் துறை பராமரிப்பில் இருந்து வருகிறது. இங்கே பெருவுடையார், பெரிய நாயகி, வராகி, முருகர், விநாயகர், கருவூரார், நடராஜர், தட்சிணாமூர்த்தி சன்னதிகள் உள்ளன. இந்த கோவிலில் 8 திசைகளில் ஆகம விதிகளின்படி இந்திரன், அக்னி தேவன், எமன், நிருதி, வருண தேவன், வாயு தேவன், குபேரன், ஈசானன் உள்ளிட்ட அஷ்ட திக் பாலகர்களின் சன்னதிகள் உள்ளன.

இதில் இந்திரன், எமன், நிருதி குபேரன் ஆகிய நான்கு சன்னதிகள் சிலை இன்றி பூட்டிய நிலையில் உள்ளன. மீதமுள்ள நான்கு சன்னதிகளில் சிலைகள் பராமரிப்பின்றி சிதைந்துள்ளன. இதனால் பக்தர்கள் வழிபட முடியவில்லை.

எனவே பூஜைகள் தடையின்றி நடக்க ஏதுவாக அஷ்டதிக் பாலகர்களின் சன்னதிகளை முறையாக பராமரிக்க வேண்டும். சிதைந்த சிலைகளுக்கு மாற்றாக புது சிலைகள் நிறுவ அனுமதிக்க மத்திய தொல்லியல் துறை அனுமதி தர வேண்டும் என தஞ்சாவூரை சேர்ந்த கலியமூர்த்தி என்பவர் கடந்த 2019ம் ஆண்டு மதுரை ஐகோர்ட்டில் பொது நல மனு தாக்கல் செய்தார்.

இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் கார்த்திகேயன், சக்திவேல் ஆகியோர் பிறப்பித்த உத்தரவில் தஞ்சாவூர் அறநிலையத்துறை இணை கமிஷனர், மத்திய தொல்லியல் துறை திருச்சி உதவி கண்காணிப்பு அலுவலர், கோவிலின் பரம்பரை அறங்காவலர் ஆகியோர் இணைந்து கோவிலில் ஆய்வு செய்து வருகிற 28ந்தேதி ஆய்வறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்டனர்.

இதைத்தொடர்ந்து கோர்ட்டு உத்தரவின் பேரில் மத்திய தொல்லியல் துறை திருச்சி மண்டல கண்காணிப்பாளர் அறவாழி, உதவி கண்காணிப்பாளர் வெற்றிச்செல்வி, முதுநிலை பராமரிப்பு அலுவலர் சோபிதா, இந்து சமய அறநிலையத் துறை திருச்சி மண்டல இணை கமிஷனர் ஞானசேகர், உதவி கமிஷனர் கார்த்திகேயன் அரண்மனை தேவஸ்தான பரம்பரை அறங்காவலர் பாபாஜி ராஜா பேன்ஸ்லே ஆகியோர் ஆய்வு செய்தனர்.

இது குறித்து பரம்பரை அறங்காவலா பாபாஜி ராஜா போன்ஸ்லே கூறுகையில்: அஷ்டதிக் பாலகர்களின் 4 சிலைகள் உள்ளன. 4 சிலைகள் இல்லை. மாயமான சிலைகளை மீண்டும் பிரதிஷ்டை செய்வது குறித்து கோர்ட் உத்தவின் போரில் ஆய்வு செய்துள்ளோம். சிலைகள் பல ஆண்டுகளுக்கு முன்பே இருந்தே மாயமானது. கோர்ட்டு உத்தரவு கிடைத்த பிறகு அடுத்தகட்ட பணிகள் தொடங்கப்படும் என்றார்.

விளம்பரம்

You Might Also Like

விளாத்திகுளம் அருகே ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் பணியாற்றிய ஊழியரை பாம்பு கடித்ததால் பரபரப்பு
குமரியில் இருந்து கேரளாவுக்கு மீன் வலைக்குள் மறைத்து மானிய மண்ணெண்ணெய் கடத்தல்: 2 பேர் கைது
குறுவட்ட போட்டியில் சில்வார்பட்டி அரசு மாதிரி மேல்நிலைப்பள்ளி மாணவிகள் முதல் இடம் பிடித்து வெற்றி: மாவட்ட அளவிலான போட்டிக்கு தேர்வு: பள்ளி ஆசிரியர்கள் பாராட்டு
என்.ஜி.ஓ காலனி இவான்ஸ் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி 29வது ஆண்டு விழா
விலையில்லா வீட்டு மனை பட்டா
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கனஂனியாகுமரிமாவட்டம்

தக்கலையில் பள்ளி மாணவி உட்பட 5 பேரை கடித்த தெரு நாய்

June 25, 2024
105 Views
ரஸ்தா காட்டில் நடைபெற்ற 2008 பானை
தடை செய்யப்பட்ட 2 டன் பாலித்தீன் பைகள் பறிமுதல்
திரிபுரசுந்தரிசித்திரகவி அரங்கேற்றம்
தருமபுரி மாவட்ட உணவு பாதுகாப்பு துறை சார்பில் செறியூட்டப்பட்ட உணவு தொடர்பான விழிப்புணர்வு
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account