கோவை, ஜூன் 03 –
ராஜா குழுமத்தின் கேஎஸ்ஆர் ரியால்ட்டி நிறுவனம், கோவை ஒத்தக்கால்மண்டபம் அருகே
மைலேரிபாளையத்தில் அமைந்துள்ள தனது புதிய பிரீமியம் குடியிருப்பு மனைத் திட்டமான கேஎஸ்ஆர் கோவை கார்டன் திட்டத்தை ஜூன் 6 மற்றும் 7 ஆகிய தேதிகளில் பிரம்மாண்டமாக அறிமுகப்படுத்துகிறது.
தென்னிந்தியாவின் முன்னணி ரியல் எஸ்டேட் நிறுவனங்களில் ஒன்றாக விளங்கும் கேஎஸ்ஆர் ரியால்ட்டி, தரமான உள்கட்டமைப்பு,வாடிக்கையாளர் நம்பிக்கை மற்றும் நீண்டகால முதலீட்டு மதிப்பை மையமாகக் கொண்டு பல்வேறு வெற்றிகரமான திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.
கோவையில் வேகமாக வளர்ந்து வரும் குடியிருப்பு மண்டலமான ஒத்தக்கால்மண்டபம் பகுதியில் அமைந்துள்ள கேஎஸ்ஆர் கோவை கார்டன் திட்டம், சிறந்த சாலை இணைப்பு, கல்வி நிறுவனங்கள் மற்றும் முக்கிய நகர்ப்புற வசதிகளுக்கு அருகாமையில் அமைந்துள்ளது. நவீன வசதிகளுடன் வடிவமைக்கப்பட்டுள்ள இந்தத் திட்டம், குடும்பங்கள் மற்றும் முதலீட்டாளர்களுக்கு சிறந்த வாய்ப்பாக அமையும்.
இது குறித்து கேஎஸ்ஆர் ரியால்ட்டி நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் ஆர் டி என்.கே. சுரேந்தர் ராஜ் கூறுகையில்: நாங்கள் உருவாக்கும் ஒவ்வொரு திட்டமும் தரம், நம்பிக்கை மற்றும் வாடிக்கையாளர்களின் எதிர்கால தேவைகளை கருத்தில் கொண்டு வடிவமைக்கப்படுகிறது.
அறிமுக விழாவில் வாடிக்கையாளர்கள், முதலீட்டாளர்கள் மற்றும் சேனல் பங்குதாரர்கள் பங்கேற்று திட்டத்தை நேரில் பார்வையிடுவதோடு, பிரத்யேக அறிமுக சலுகைகளையும் பெறலாம் என்று தெரிவித்தார்.



