கோவை, செப். 23 –
தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன், ஓரணியில் தமிழ்நாடு தீர்மான ஏற்பு பொதுக்கூட்டம் கோவை மாநகர் மாவட்ட தி.மு.க. சார்பில் கோவை சித்தாபுதூர் வி.கே.கே.மேனன் சாலையில் நடை பெற்றது. மாநகர் மாவட்ட தி.மு.க. செயலாளர் நா.கார்த்திக் தலைமை தாங்கி பேசினார்.
அவர் கூறுகையில், வருகின்ற சட்ட மன்ற தேர்தலில் வியூகம் அமைத்து பணியாற்ற சட்டமன்ற தொகுதி வாரியாக பார்வையாளர்களை முதல்- அமைச்சர் மு.க.ஸ்டாலின் நியமனம் செய்து உள்ளார். தி.மு.க. ஆட்சியில் கோவையில் ஏரா ளமான திட்டங்கள் கொண்டு வரப்பட்டு உள்ளன என்றார்.
இதில் தலைமை கழக பேச்சாளரும், மாநில சட்டத்துறை இணை செயலாளருமான சூர்யா வெற்றிகொண்டான் பேசினார். அதைத் தொடர்ந்து ஓரணியில் தமிழ்நாடு பிரசாரத்தில் அதிக உறுப்பினர் களை சேர்த்த மாநகர் மாவட்ட பூத்கமிட்டி நிர்வாகிகளுக்கு பொன்னாடை அணிவித்து, நினைவுப் பரிசு வழங்கப்பட்டது. இதில் கணபதி ராஜ்குமார் எம்.பி., தலைமை கழக பேச்சாளர் கோவை சம்பத்,மேயர் ரங்கநாயகி, மாநகர் மாவட்ட துணைச் செயலாளர்கள் கோட்டை அப்பாஸ், தளபதி இளங்கோ உள்பட பலர் கலந்து கொண்டனர். முன்னதாக ஓரணியில் தமிழ்நாடு தீர்மான ஏற்பு உறுதிமொழியை அனைவரும் ஏற்றுக்கொண்டனர்.



