கோவை வடக்கு மாவட்டம், சிறுமுகை தியேட்டர் மேடு பகுதியில் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் 31ம் ஆண்டு துவக்க விழா நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு வடக்கு மாவட்ட செயலாளர் பி.என்.ராஜேந்திரன் தலைமை வகித்து அனைவரையும் வரவேற்றார். இதில் சிறப்பு அழைப்பாளராக திமுக பேரூர் கழகச் செயலாளர் எம்.ஆர்.உதயகுமார் கலந்து கொண்டார். பொருளாளர் தி.க.நடராஜன் கழக கொடி ஏற்றி வைத்தார்.நிகழ்விற்கு துணைச் செயலாளர் ஏசுதாஸ், ஒன்றிய செயலாளர் பத்திரப்பன், பொதுக்குழு உறுப்பினர் வேலுமணி, சிறுமுகை பேரூர் கழகச் செயலாளர் ஆர்.நடராஜன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நிகழ்ச்சியில் தலைமை செயற்குழு உறுப்பினர் வரதையன், ஆசிரியர் சண்முகம், மேட்டுப்பாளையம் நகர செயலாளர் இக்பால், விவசாய அணி நிர்வாகி தி.க.சுந்தரம், அவைத் தலைவர் கிருஷ்ணசாமி, பெயிண்டர் ஆறுமுகம், புங்கம்பாளையம் ஆனந்தன், வடக்கு மாவட்ட திமுக வர்த்தக அணி துணைச் செயலாளர் பத்மநாபன் உள்ளிட்டோர் கலந்து கொண்டு பொது மக்களுக்கு இனிப்புகள் வழங்கி கொண்டாடினார்கள்
கோவை மாவட்ட மறுமலர்ச்சி திராவிட முன்னேற்ற கழகம் சார்பில் 30 ஆம் ஆண்டு துவக்க விழா



