ஈரோடு | செப். 26
பெருந்துறையில் உள்ள கொங்கு நேச்சுரோபதி மற்றும் யோகா மருத்துவக் கல்லூரியில், ரோட்டரி கிளப் ஆஃப் ஈரோடு நெக்சஸ் சார்பில் ரோட்டராக்ட் கிளப் ஆஃப் கொங்கு என்.சி. சங்கத்தின் நிறுவுதல் விழா நடைபெற்றது. விழாவில் ரோட்டரி கிளப் ஈரோடு நெக்சஸ் தலைவர் தலைமையில், புதிய ரோட்டராக்ட் நிர்வாகிகள் பதவியேற்றுக் கொண்டனர்.
2026–27ஆம் ஆண்டிற்கான நிர்வாகிகளாக ரோட்டராக்டர் பிரமா ரிஷா தலைவராகவும், ரோட்டராக்டர் விஷ்ணு செயலாளராகவும் பொறுப்பேற்றுக் கொண்டனர். விழாவில் தலைமை விருந்தினராக முன்னாள் மாவட்ட ஆளுநர் டாக்டர் ஜார்ஜ் சுந்தரராஜ் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.
மேலும், கல்லூரி தாளாளர் கார்த்திகேயன், முதல்வர் டாக்டர் பிரதாப் சிங், மாவட்ட ரோட்டராக்ட் பிரதிநிதி வருண் குமார் உள்ளிட்ட ரோட்டரி மற்றும் ரோட்டராக்ட் நிர்வாகிகள் கலந்து கொண்டு புதிய நிர்வாகிகளுக்கு வாழ்த்துகளைத் தெரிவித்தனர். விழாவில் இளைஞர்களின் தலைமைத்துவம், சமூகப் பொறுப்பு மற்றும் சேவை மனப்பான்மையை வளர்ப்பதன் அவசியம் குறித்து எடுத்துரைக்கப்பட்டது.



