தென்காசி, ஜூலை 22 –
தென்காசி மாவட்டம் குற்றாலத்தில் சாரல் திருவிழாவை வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் குத்து விளக்கேற்றி துவக்கி வைத்தார். சாரல் திருவிழா துவக்க விழாவில் தென்காசி மாவட்ட ஆட்சியர் கமல் கிஷோர், தென்காசி சட்டமன்ற உறுப்பினர் பழனி நாடார், வாசுதேவநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் சதன் திருமலைகுமார், சங்கரன்கோவில் சட்டமன்ற உறுப்பினர் ராஜா, மாவட்ட வருவாய் அலுவலர் ஜெயச்சந்திரன், தென்காசி தெற்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் ஜெயபாலன் மற்றும் அரசு அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
சாரல் திருவிழா துவக்க விழாவில் கொலு கொலு குழந்தைகள் போட்டியில் வெற்றி பெற்ற முதல் மூன்று குழந்தைகளுக்கு சான்றிதழ் மற்றும் மாரத்தான் போட்டியில் வெற்றி பெற்ற முதல் மூன்று நபர்களுக்கு பரிசுகளை வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் வழங்கினார்.