நாகர்கோவில், ஜூலை 25 –
குமரி மாவட்டத்தில் ரப்பர் விலை ரூ.213 ஆக உயர்வு செய்யப்பட்டுள்ளது. குமரி மாவட்டம் மற்றும் கேரளாவில் தென்மேற்கு பருவமழை காணப்படுகிறது. காலை வேளையில் பெய்து வருகின்ற மழையால் ரப்பர் பால்வெட்டு பணிகள் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் ரப்பர் ஷீட்டுகள் உற்பத்தியும் குறைந்துள்ளது. சர்வதேச சந்தையில் ரப்பர் விலை கிலோ ரூ.200க்கு கீழ் இருந்து வருகிறது. கோட்டயம், கொச்சி, சந்தைகளில் ஆர்எஸ்எஸ் 4 கிரேடு ரப்பர் விலை கிலோவிற்கு ரூ.213 ஆக விற்பனை செய்யப்படுகிறது.
வெளிச்சந்தைகளில் ஆர்எஸ்எஸ் 4 கிரேடு ரப்பர் விலை கிலோ 205 ஆக விற்பனை செய்யப்படுகிறது. சந்தையில் வருகின்ற ரப்பரின் அளவு குறைவாக உள்ளது. கடந்த மாதம் 19-ம் தேதி ஆர்எஸ்எஸ் 4 கிரேடு ரப்பர் விலை கிலோ 200ஐ கடந்திருந்தது. இந்த மாதம் 18-ம் தேதி ரூ.210ஐ எட்டியது. நேற்று முன்தினம் ஒரு கிலோ ரப்பர் விலை கோட்டயம் மார்க்கெட்டில் ரூ. 213 ஆக இருந்தது. வரும் நாட்களில் விலை மேலும் உயர வாய்ப்பு இருப்பதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.